Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக… எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும்

வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாக… எந்த கடவுளை, எந்த நாளில், எப்ப‍டி வழிபட வேண்டும்

இப்போதெல்லாம் வீடு… வாடகைக்கு கிடைப்பதே அதிலும் நாம் எதிர்பார்க்கும் வாடகைத் தொகைக்கேற்ப

வீடு கிடைப்ப‍து பெரும்பாடு. அப்ப‍டியே கிடைத்தாலும் சில பல குறைகள் அந்த வாடகை வீட்டில் இருக்கும். அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு சகித்துக் கொண்டு வாழ பழகினாலும், மனத்தில் நாம் எப்போது வீடு, நிலம் வாங்குவோம். அந்த வீட்டில் அல்ல‍து அந்த நிலத்தில் வீடு கட்டி எப்போது குடியேறுவோம் என்ற ஏக்க‍ம் எல்லோருக்கும் இருப்ப‍து இயல்பே. ஆனால் வீடு நிலம் வாங்குவதற்குகூட உங்களுக்கு யோகம் வேண்டும்.

ஆம் திருவோணத் திருநாள் அன்று பகவான் விஷ்ணுக்கு துளசி மாலை சாத்தி, அவருக்கு துவரம் பருப்பு பாயசம் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். அப்ப‍டி நிவேதனம் செய்ததை அப்ப‍டியே தானமாக வழங்கி வந்தால் நிச்ச‍யம் அவர்களுக்கு வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகி, சொந்த வீட்டில் குடியேற அல்ல‍து சொந்தமாக நிலம் வாங்கி வாழ்வில் அவர்கள் கண்ட கனவை நிறைவேறும். இது குபேர ரகசியங்களி ல் ஒன்றாம்.


– ஜோதிடர் ஒருவர் எனது நண்பருக்கு சொன்ன‍து, அதை என் நண்பன் என்னிடம் சொன்னான். என் நண்பன் சொன்ன‍தை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: