Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலும், சில காதல் சுவாரஸ்யங்களும்

ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலும், சில காதல் சுவாரஸ்யங்களும்

தாடி (Beard) வைத்த‍ ஆண்களைப் பார்க்கும் போது, பாவம் அவருக்கு காதல் தோல்வியா அல்ல‍து ஏதேனும் குடும்ப கஷ்டமா? என்று கேட்டு அவரை

பரிதாபமாக பார்க்கும் மனோபாவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டி ருக்கும். ஆனால் மருத்துவ அறிவியல் சார்ந்து ஆய்வுகள் மே ற்கொள்ளும் போது அந்த ஆண்களின் தாடிக்குள் ஒளிந்திருக்கும் மருத்துவ அறிவியலையும், சில காதல் சுவாரஸ்ய ங்களையும் இங்கு காணவிருக்கிறோம்.

ஆண்களுக்கு மட்டும் தாடியின் உபயோகம்

ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம் “தாடி வைத்த ஆண்களை ப்பற்றி என்ன உணருகிறீர்கள்” என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன்உள்ள ஆண்களின் முகம், முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தை க்காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சி த்தன்மை , சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.

இறுதியாக இந்த ஆய்வு “தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவு ம், ஆண்களை அதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் ” இருப்பதாகத் தீர்மானிக்கிறது.(they concluded from their studies that beard increases “sexual magnetism” and attractiveness and makes men more appealing to women.)

(பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்தபோதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதா க உள்ளதோ அதுபோல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)

கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ராபர்ட் J பெல்லிக்ரி ணி என்பவர் 1973 ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்து எடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.

1. முழு தாடியுடன்
2. குறுந்தாடியுடன்
3. மீசையுடன்
4. முழுவதும் சவரம் செய்யப்பட்ட முகத்துடன்.

இந்தப் புகைப்படங்கள் எடுத்து முடித்த உடன், மொத்தம் 32 போட்டோக்களில் ஓவ்வொரு படமும் இரண்டு ஆண்கள் இரண்டு பெண்களிடம் கொடுக்கப்பட்டன. இப்படி 64ஆண்களிடமும் 64கொடு க்கப்பட்டன. அந்த ஆண்களிடமும், பெண்களிடமும், அந்த போட்டோவில் உள்ளவர்களின் ஆளுமைப்ப ண்பு கூறுகள் (personality trait) அடிப்படையில் முதன்முதலி ல் போட்டோவைப் பார்த்தவுடன் ஏற்பட்ட உணர்வு, அபிப்பிராயத்தை, (first impression) மதிப்பிடுமாறு கூற ப்பட்டது.

அந்த ஆய்வின் முடிவு இப்படி தீர்மானிக்கிறது.” அந்த ஆண்களின் ஆண்மைத் தன்மை, நல்ல தோற்றம், ஆதிக்க உணர்வு, முதிர்ந்த தன்மை, தைரிய தோற்றம், தாராளவாத இயல்பு, ஆரோக்கியத் தன்மை, கவர்ச்சித் தோற்றம் ஆகிய பண்புகளு ம் அவர்களின் முகத்தில் உள்ள முடிகளின் எண்ணிக்கையுடன் நேரடி தொடர்பு உள்ளதாக நிருபித்துள்ளது”

(The result of this study by Pelligrini indicated a generally positive correlation between the amount of hair on the person’s face and his being perceived as masculine, good looking, dominant, mature, courageous, liberal, non-confirming, older healthy and attractive.)

அமெரிக்க மருத்துவர் Dr. சார்லஸ் ஹோமேஸ் (Dr. Charles holmes) என்பவர் இப்படிக் கூறுகிறார்,:

“மக்கள் தாடி வளர்க்க ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிய வில்லை? தலையில் முடி வளர்க்கும் போது, அதே முடியை முகத்தில் வளர்ப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று தெரிய வில்லை? என்கிறார்.

தலையின் முடி கொட்டிவிட்டால், மிக கஷ்டப்பட்டு வெட்கப்படும் அதே மக்கள், சந்தோசமாக தாடியை ஏன் சவரம் செய்கிறார்கள் என்பது ஆச்சரி யமாக உள்ளது.

தாடி மனிதனின் முகத்தை, தீங்குதரும் இரசாயணம், காற்றில் உள்ள மாசுக்களிடம் இருந்து பாதுகாக்கிறது. இந்த மாசு, மற்றும் இராசயனத்தால், முகத்தின் செல்கள் பாதிக்கப்பட்டு, சுருங்கி, அசிங்கமான தோளாக நாளைடைவில் ஆகிறது.

இதனால் முகச்சுருக்கம், மோசமான தோல், தோல் வயோதிகம் ஆகியவற்றில் இரு ந்து தாடி பாதுகாக்கிறது.

தாடி முகத்தில் உள்ள சரும மெழுகு சுரப்பிகள் என்னும் sebaceous glandஐ பாதுகாத்து, அதில் நோய்தொற்றி, பருக்கள் , சலம், புள்ளிகள் வருவதைவிட்டும் தடுக்கிறது.

தாடி முகத்தைச் சற்று வெதுவெதுப்பக வைத்து, கன்னத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கிறது.

தாடி தொண்டை மற்றும் பல் ஈறுகளின் நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

தாடி வைப்பதால் அநேக சுவாச பிரச்சினைகள் தடுக்கப்படுகி றது.

ஆய்வுகள் இப்படி கூறுகின்றன :”தடியின் நீளம் மற்றும் அடர்த்திக்கும், அந்த மனிதனின் புதிசாலித்தனதுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது”

தாடி வைப்பதால், மனிதனின் பொன்னான நேரம் மிச்சப்படு கிறது. (மேற்சொன்ன Dr. ஹெர்பெர்ட் மேஷ்கோன் (Herbert Mescon) கணக்குப்படி. தாடி வைப்பதால், மனிதனின் செலவு மிச்சப்படுகிறது. (சவரக் கத்தி – Shaving blade, ஷேவிங் ஜெல்- Shaving gel, after shave lotion விலை- சவரத்திற்கு பிறகு போடும் திரவத்தின் விலை)

– G Vittal Rao, Facebook 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: