Friday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்

இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – அவர்களைப் பற்றிய ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்

பாரத நாட்டின் ப‌ழம்பெரும் இரட்டைக் காப்பியங்களாக இராமாயணமும் மகா பாரதமும் (Ramayana and Mahabharata) இருந்து வருகின்றன• இவை

இரண்டும் புனித நூல்களாக போற்றப்படுகின்றன• மேலும் வைணவ சமயத்தின் நாயகர் ஸ்ரீ விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய இரண்டு அவதாரங்கள் இங்கு மிகவும் அதீதமாக போற்றப்பட்டு வருகின்றன• அந்த இரட்டை காப்பியங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ முக்கிய மான 68 கதாபாத்திரங்களையும், அவர்களைப் பற்றிய சிறு விளக்கும் இங்கு படிக்க‍ விருக்கிறீர்கள். படியுங்கள் பக்தியுறுங்கள்.

1. அகல்யை (Agaligai)

– ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள் (Rama’s curse was taken away by the curse)

2. அகத்தியர் (Agathiar)

– ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர். (Aditya hrudhaya is the preacher of Rama on the battlefield)

3. அகம்பனன் (Agambanan)

-ராவணனிடம் ராமனைப்பற்றி கோள்சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழை த்த அதிசய ராட்சஷன் (Ravana told him about Raman. The miraculous giants survived by Raman’s arrow)

4. அங்கதன் (Angathan)

– வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன். (Son of Vaali and Thaarai, He is prince of the Kishkindha)

5. அத்திரி (Aththri)

– அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராம தரிசனம் பெற்றவர். (Husband of Anusuya, he got Rama’s Darshan)

6. இந்திரஜித் (Indrajith)

– ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன். (He, son of Ravana, Killed by Lakshmana. His another name, Meganathan)

7. கரன் & தூஷணன் (Karan, Dooshanan)

– ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள். (Brother’s of Rama, they Killed by Rama. They are Kings of Janasdhana)  

8. கபந்தன் (Gabandhan)

– தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன் (A Monster that has no head and Legs. Raman was Killed. Rama & Lakshmana was the one who showed the way to Kishkinda) 

9. குகன் (Kugan)

-வேடர் தலைவன், படகோட்டி, ராமரால், சகோதரனாக ஏற்றுக் கொள்ள‍ப்பட்ட‍வன் (Hunter’s Leader, boat driver, Rama was accepted as a brother)

10. கும்பகர்ணன் (Kumbakarna)

– ராவணனின் தம்பி, ஆறுமாதங்கள் சாப்பிட்டும், மீதமுள்ள‍ ஆறுமாதங்கள் பெரும் தூக்கம் தூங்கியே பொழுதை கழிப்பவன் (Ravana’s brother, six months of eating, the Sleep of the six months)

11. கும்பன் (Kumba)

– கும்பகர்ணனின் மகன் (Son of Kumbakarna)

12. குசத்வஜன் (Susajvajan)

– ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார். (Younger Brother of Janaka, Father of Mandavi & Surudhakeerthi, Father in law of Bharadha & Sathrukana)

13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை (Kowsalya, Kaikeyee & Sumithra)

– தசரதரின் பட்டத்தரசியர் (Queens – wifes of Dhasaraha Maharaja) 

14. சுநைனா (Sunaina)

– ஜனகரின் மனைவி, சீதையின் தாய் (she is Wife of Janaka Maharaja and Mother of Seetha)

15. கவுதமர் (Gowthamar)

– அகல்யையின் கணவர், முனிவர் (Husband Agaligai , Sage)

16. சதானந்தர் (Sadhanandha)

– அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர். (He is  Aklai-Gauthamar’s son. The priest who came to the wedding of Sita)

17. சம்பராசுரன் (Sambrasoora)

– இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார். (Dasaratar helped the gods in the battle of Sambasoora Vs. the gods)

18. சபரி (Sabari)

– மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள் (Student of Madhanga Sage and He saw Rama’s Darshan)

19. சதபலி (Sadhabali)

– வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன். (He went to search for Sita in the north direction)

20. சம்பாதி (Sambadhi)

– கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.  (The elder brother of the eagle king Jatayu, helped Angadhan’s army)

21. சீதா (Seetha)

– ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு. (Wife of Rama, she had another five names – Janaki, Vaidegi, Jana ganandhini, Janaga kumari & Mythili)

22. சுமந்திரர் (Sumandhirar)

– தசரதரின் மந்திரி, தேரோட்டி (Dhasaradha’s Minister & Charioteer)

23. சுக்ரீவன் (Sukriva)

-கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவ ன். (King of Kishkindha, Brother of Vaali. He was born of the grace of the sun god)

24. சுஷேணன் (Sushona)

– வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்செ ன்றவன். (Father in law of Vaali, Doctor of Monkeys, He went to search for Sita in the west direction

25. சூர்ப்பணகை (Surpanaga)

– ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள் (Sister of Ravana. widow) 

26. தசரதர் (Dhasaradha)

– ராமனின் தந்தை (Father of Rama)

27. ததிமுகன் (Tathimugan)

– சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர் (Small Dady-Uncle of Sukriva. The guardian of that part of the Madhuvanam)

28. தாடகை (Thaadagai)

– காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள் (The Female-monster who lived in the jungle was killed by Rama)

29. தாரை (Thaarai)

– வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி (Wife of Vaali, Mother of Angadha. Wonderful Queen of the Monkey group. she will  Knowledged)

30. தான்யமாலினி (Dhanya Malini)

– ராவணனின் இளைய மனைவி (She, Younger wife of Ravana)

31. திரிசடை (Thirisada)

– அசோக வனத்தில்  அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள் (she, good female-monster, She gave hope to Seetha in Asoga vana)

32. திரிசிரஸ் (Thirisirus)

– ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி (Karan’s commander, Ravana’s brother)

33. நளன் (Nalan)

-பொறியியல் அறிந்த வானரவீரன், விஸ்வகர்மாவின்ம கன், கடலின்மீது இலங்கை க்கு பாலம் கட்டியவன் (Well Technical knowledged and Paladin of Monkey Group)

34. நாரதர் (Naradha)

– பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர் (Son of Brahma. Riot Sage) 

35. நிகும்பன் (Nigumbhan)

– கும்பகர்ணனின் மகன் (Son of Kumbakarna) 

36. நீலன் (Neelan)

– வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் (He is Commander of Monkey Groups and he also Good Friend of Nalan)

37. பரசுராமர் (Parasurama)

– விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர் (Vishnu’s incarnation, father of Jamatgani, fought with Raman)

38. பரத்வாஜர் (Baradhvaja)

– பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர் (he found Ashrama in Prayagai)

39. பரதன் (Bharada)

– கைகேயியின் மகன், ராமனின் தம்பி (Son of Kaikeyee, Brother of Rama) 

40. மந்தரை (Mandra)

– கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர் (A keeper from Keyakaya to Ayodhya with Kaiyayi. she is also called  Kooni)

41. மதங்கர் (Madhangar)

– தவ முனிவர் (St. Sage)

42. மண்டோதரி (Mandodhari)

– தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய் (The daughter of the Devaloka sculptor Mayan and Wife-Queen of Ravana. Mother of Indrajit) 

43. மாரீசன் & சுபாகு (Mareesan & Subagu)

– தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்  (Sons of Thaadai, they are killed by Rama. Marisson came to be a magical Spotted dear)

44. மால்யவான் (Malyavaan)

– ராவணனின் தாய்வழிப்பாட்டன் (Grand father of Ravana)

45. மாதலி (Madhali)

– இந்திரனின் தேரோட்டி (Driver of Indran) 

46. யுதாஜித் (Udhajith)

– கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன் (Younger Brother of Kaikeyee. Uncle of Bharada)

47. ராவணன் (Ravana)

– மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன். (He is Son of Michrava, Younger Brother of Kubera, Grand son of Pulashthiya Sage) 

48. ராமன் (Rama)

– ராமாயண கதாநாயகன் (The One and only Hero of Ramayana) 

49. ரிஷ்யசிருங்கர் (Rishyasirungar)

– புத்திரகாமேஷ்டி செய்த முனிவர். (Puthirakameshti Sage)

50. ருமை (Rumai)

– சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள் (Wife of Sukriva. arrested by Vaali

51. லங்காதேவி (Lanka devi)

– இலங்கையின் காவல் தெய்வம் (Goddess cum Guardian of Srilanka) 

52. வசிஷ்டர் (Vashishtar)

– தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர் (The Moral Teacher of Dhasaradha. Husband of Arundhathi)

53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதம ர், ஜாபாலி (Margandeya, Mavuthkalyar, Vaamadevar, Kashyabar, Karththiyayanar, Gowdhamar & Jabali) 

– தசரதரின் மற்ற குருமார்கள் (Teachers of Dhasaradha Chakravarthi)

54. வருணன் (சமுத்திரராஜன்) – (Varuna – Samuthira Rajan)

– கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன் (King of Ocean. He have permission to built dam for Rama) 

55. வால்மீகி (Vaalmiki)

-ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனா க இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடை க்கலம் அளித்தவர். (He Written Ramayana, His birth name was Rathnagar, The former robber, Raman’s son Kusan Teach Ramayana, who gave shelter to Seetha)

56. வாலி (Vaali)

– இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன் (He was born grace of Indra and  King of Monkeys group)

57. விஸ்வாமித்ரர் (Vishvamithra)

– ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா-ராமன் திருமணத்திற்கு காரணமா னவர் (Rama’s Teacher for  the art of the Asthira Vithai, He is source for Sita-Raman’s marriage)

58. விராதன் (Viradhan)

– தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன் (

59. விபீஷணன் (Vibeeshana)

– ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன் (Ravana’s younger brother, Rama’s refuge)

60. வினதன் (Vinadhan)

– கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன் (He went to search for Sita in the east direction)

61. ஜடாயு (Jadayu)

– கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன் (Dhasaradha’s companion, brother of Eagle King Sampadhi, who fought & died with Ravana for Seetha

62. ஜனகர் (Janagar)

– சீதை, ஊர்மிளாவின் தந்தை (Father of Sita and Oormila) 

63. ஊர்மிளா (Oormila)

– லட்சுமணனின் மனைவி (Wife of Lakshma)

64. ஜாம்பவான் (Jambavan)

– கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர் (Bear King, He born with Brahmma’s graces)

65. அனுமான் (Hanuman)

– அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்ச நேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள் (Anjanai and Kesari were born by the grace of the guru, His other names are  Anjaneya and Maruthi)

66. ஸ்வயம்பிரபை (Svyambrabai)

– குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள் (Tapaswini, who lived in the cave, feeds the monkeys force)

67. மாண்டவி (Mandavi)

– பரதனின் மனைவி (Wife of Bharadha)

68. சுருதகீர்த்தி (Surudhakeerthi)

– சத்ருக்கனனின் மனைவி (Wife of Sathrukanan)

69. கம்பர் (Kambar)

– வால்மீகி எழுதிய இராமாயணத்தை தமிழில் எழுதியவர். இவர் எழுதிய இராமாய ணத்தைத்தான் கம்பராமாயணம் என்று தமிழர்களால் போற்றப்பட்டு வருகிறது. (He wrote Ramayana in the Tamil language known as Kambaramayana)

=> த‌கவல் சக்திவேல் பாலசுப்ரமணியன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

 

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: