Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதலியின் மூக்கு உங்களுக்கு உணர்த்தும் உணர்வுகள்

காதலியின் மூக்கு (Nose) உங்களுக்கு உணர்த்தும் உணர்வுகள்

ந‌மது உடலில் இருக்கும் அத்த‍னை உறுப்புக்களில் ஒவ்வொரு வகையிலும் நமது மனத்தின்

உணர்வுகளை பிரதிபலிக்கின்றன• கைகள், கால்கள், கண்கள், வாய் , உதடுகள், நெற்றி, புருவம், தோள்கள் அந்த வரிசையில் நமது மூக்கும் வருகிறது.

நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் மூக்கின் பங்கு முக்கிய மானது. கோபமோ, நாணமோ முதலில் சிவப்பது மூக்கின் நுனி தான். மூக்கு என்பது நம் முகத்தில் வெறும் அலங்காரத்துக்காக மட்டுமே என்று நினை த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களின் முக்கிய உறுப்பு களில் மூக்கும் ஒன்று. அந்த வகையில் ஒருவரது மூக்கு உதாரண மாக உங்கள் காதலியின் மூக்கு உங்களுக்கு உணர்த்தும் உணர்வு களை இங்கு காணவி ருக்கிறோம்.
 
இஸ்ரேலில் உள்ள பென்-குரியன் (Penkurren) பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆப்ரகாம்தமிர் என்பவர் மனிதர்களுக்கு 14 விதமான மூக்குகள் உள்ளன என்று கண்டறிந்துள்ளார். தனது மாணவர்கள் துணையுடன் மனித மூக்கு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ஆப்ரகா ம்தமிர் (Abraham Tamir), பிறை வடிவிலான மெல்லிய மூக்கு, சதைப்பிடிப்பு மூக்கு, உருண்டை மூக்கு, ரோமன் மூக்கு என மொத்தம் 14 விதமான மூக்குகள் இருப்பதாக பட்டி யலிட்டு ள்ளார்.

மனிதர்களுக்கு எத்தனை வகைமூக்குகள் உள்ளன? என்ப தை கண்டறியவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மூக்கின் வடிவத்திற்கு தகுந்து மனிதர்களின் இயல்பினையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக அவர் தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.

ரோமன் மூக்கு (Roman Nose)

நடிகர் டாம்குரூஸின் ரோமன் (tomcruise)  மூக்கிற்கு 9%பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தவகை மூக்கு உடையவர்க ள்தெளிவான சிந்தனையும், உயர்ந்த லட்சியமும் கொண்டவர்கள் என்பது கண்ட றியப்பட்டுள்ளது.

வளைந்த மூக்கு (bend Nose)

ஹாரிபார்டர் கதாநாயகன் டேனியல்ராட்கிளிப் (harry potter daniel radcliffe) மூக்கிற்கு 9%பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சற்றே வளை ந்து காணப்படும் இந்த வகை மூக்கை உடையவர்கள் அமைதியான மனதுடன் கூடிய வர்த்தக ரீதியாக சிந்தனை உடையவர்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள து.

சப்பை மூக்கிற்கு 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது வெய்னே ரூனியின் சப்பை மூக்கு அநேகம் பேரை கவர்ந்துள்ளது.

ஓவியர்களை கவர்ந்த மூக்கு 

இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டனின் மூக்கு அனைவரை யும் கவரக்கூடியதாக உள்ளது. ஓவியக்கலைஞர்கள் அனைவரும் விரும்புவது இந்த வகை மூக்கி னைத்தான். சதைப்பிடிப்பிடிப்புள்ள மூக்குகள் ஆண்களிடம் தான் அதிகமாக காணப்படுகின்றன. இந்த மூக்குக்கு உதாரணம் கூற வேண்டுமானால், இளவரசர் பிலிப்பை சொல்லாம்.

மூக்கு பிளாஸ்டிக் சர்ஜரி (Plastic Surgery) செய்வதில் வல்லுநரா க திகழும் சைமன் வித்தே (simon webbe) என்பவர் அநேக பெண்கள் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜூலி (angelina jolie) யின் மூக்கினைத்தான் அதிகம் விரும்புவதாக தெரிவித்துள்ளா ர். ஏஞ்சலீனாவின் மூக்கு பிரத்யேக வடிவமைப்பு கொண்டதாக உள்ளதே இதற்கு காரணம்.

அதிகம் விரும்பப்படும் மூக்கு

எந்த வகையான மூக்கை விரும்புகிறீர்கள் என்று பொதுமக்களிட ம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் லேசாகவளைந்த பிறைவடிவ மூக்கை விரும்புவதாக 13% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நீண்ட மூக்கை பெரும்பாலானோர் விரும்பவில்லை தடிமனான மூக்குக்கு  5% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தள்ளனர்.

=> மயூரா அகிலன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: