மலைவேம்பு (Melia Azedarach) இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கின் கடைசி நாளில் குடித்துவரும் பெண்களுக்கு…
பெண்களின் உடலில் உள்ள கருப்பை, தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்வதை த்தான் மாத விலக்கு என்கிறார்கள். அந்த
மாத விலக்கினால் சில பெண்களுக்கு அதீத பாதிப்புக்கள் ஏற்படுத்தும். இதனால் குழந்தைப்பேறு கிடைக்ககூடிய வாய்ப்பு க்கள் குறைந்து போகலாம்.
ஆகையால் அந்த மாத விலக்கான பெண்கள், சுத்தமான மலைவேம்பு இலைகளை எடுத்து, அதனை பிழிந்து சுமார் 10.மிலி. சாற்றை எடுத்து, ஒரு குவளை பசுப்பாலில் நன்றாக கலந்து அதனை, மாத விலக்கின் கடைசி நாளில் (3ஆவது நாளில்) அதிகாலையில் குடித்து வந்தால், கருப்பைக் கோளாறுகள் (Uterus Diseases) அனைத்து நீங்கி குழந்தைப் பேறுக்கு வழி கிட்டும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள். மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
= பிருந்தா