Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் வாழ்வளித்தது M.R. ராதா – அரிய தகவல்

சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால் சிவாஜிக்கு வாழ்வளித்தது M.R. ராதா – அரிய தகவல்

நடிகர் திலகம் சிவாஜியின் முதல் திரைக்காவியம் பராசக்தி… இந்த திரைப்படத்தில்

கலைஞரின் அனல் கக்கும் வசனத்தை தீப்பொறி பறக்க‍ பேசி திற ம்பட நடித்த‍வர் சிவாஜி கணேசன் (Nadigar Thilagam Sivaji Ganesan) . அறிமுகமான ஒரே திரைப்பட த்திலேயே உச்ச‍த்திற்கு சென்ற இரண்டாவது நடிகர் என்ற பெருமை யை இவர் பெற்றுள்ளார்.

சிவாஜிகணேசனின் நடிப்பாற்றலை கண்டுவியந்து பாராட்டிய பெருமாள்முதலியார் (Perumal Mudhaliar)… தனது பராசக்தி  (Parasakthi) படத்தில் அவரையே கதாநாயகனாக நடிக்க‍ வாய்ப்புக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்கி நல்ல‍முறையி ல் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒருநாள் பெருமாள் முதலியாரிடம், சிவாஜியை நீக்கி விட்டு வேறு ஒரு நடிகரை போட்டு எடுங்க அப்போதுதான் உங்கள் படம் வெற்றிபெறும் இல்லையெ ன்றால் உங்க படம் பெட்டியில் தூங்கும் என்று சொல்லியிருக்கார் திரு. ஏ.வி.எம். (AVM) அவர்கள்.

இதுகுறித்து பெருமாள் முதலியார்… நடிகவேள் எம்.ஆர். ராதாவிடம் சொல்லியிரு க்கிறார். அப்போது எம்.ஆர். ராதா அவர்கள் (M.R. Radha) பெருமாள் முதலியாரிடம், “எந்தப்பய கணேசன் மாதிரி நடிக்க இருக்கான்? நாடகத்திலேயே நடிச்ச வனுக்குத் தான் சினிமாவிலே நடிக்கத் தெரியும். அதனாலே இவனையே (சிவாஜியையே) வெச்சு எடுங்க… இல்லைன்னா படம் டப்பாவாகப் போகும்” என்று கூறியுள்ளாராம்.

நடிகவேள் எம்.ஆர். ராதா கொடுத்த‍ நம்பிக்கையின் பேரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை வைத்து முழுத் திரைப்படத்தையும் எடுத்து முடித்தார். அந்த திரைப்படம் ஹிமாலய சாதனை படைத்தது. சிவாஜியும் உச்ச‍த்திற்கு சென்றார்.

கொஞ்சம் நினைத்து பாருங்கள். அன்று M.R. ராதா அவர்கள் மட்டும், சிவாஜிக்கு ஆதரவாக பெருமாள் முதலியாரிடம் பேசி யிருக்காவிட்டால் இன்று நமக்கு நடிகர் திலகம்  என்ற ஒப்பற்ற அந்த‌ திரைச்சிங்கம், சிம்மக்குரலோன், கலைத்தாயின் செல்ல மகன், நடிப்பு பல்கலைக் கழகம், உணர்ச்சிகளின் ஊற்று, சரித்தி ரத்தை சரித்திரமாக படைத்தவர், நமக்கு கிடைத்திருப்பாரா?

இப்போது சொல்லுங்கள் சிவாஜிக்கு வாய்ப்பளித்தது பெருமாள் முதலியார் என்றால், சிவாஜிக்கு வாழ்வளித்தது எம்.ஆர். ராதாதானே

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: