புஸ்வானம் – அம்மா இட்லி சாப்பிட்டாரா? இல்லையா?
இந்த (அக்டோபர், 2017) மாத நம் உரத்த சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்
எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன் என்கிற திரைப்பட வசனம் இப்போது நூற்றுக்கு
இருநூறு சதவீதம் நம் தன்மானத் தமிழ்நாட்டிற்குப் பொருந்தும் . அம்மா உணவகம், அம்மா மருந்தகம், கிராமங்கள் தோறும் சிற்றூ ந்து, 69% இட ஒதுக்கீடு, விலையில்லா மடிக்கணிணி, இலவச புத்த கங்கள் என பல தொலை நோக்குத் திட்டங்களால் தேசிய அளவில் தலை நிமிர்ந்த தமிழகம்… அப்போலோ அலங்கோலம், கூவத்தூர் குத்தாட்டம், குடுமலை கும்மாளம், சமாதி சத்தியம், சமாதி தியான ம் போன்றவற்றால் உலகளவில் தலை குனிந்து கூனிக்குறுகி நிற்கிறது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்த ஒரு கட்சி என்ற வரலாற்றைத் திருப்பிய கட்சியின் இன்றைய கலவரம் … மன்னிக்கவும் இன்றைய நிலவரம் கலவரம் வருத்தத்துக்குரிய து மட்டுமல்ல கேவலத்துக்குரியதும் கூட
ஜெயலலிதா என்ற சர்வ வல்லமையின்முன்பு ஒற்றுமையாகவும், ஓரணியாகவும், எஃகு கோட்டையாகவும், கம்பீரமாய் நின்ற அந்த கடிதம்… இன்று அணி அணியாய் பிரிந்து பிளந்து கலக கூடாரமாய் காட்சியளிப்ப தை அம்மாவின் ஆன்மா எப்படி மன்னிக்கும்?
காலில் விழுவது, காலை வாருவது, காட்டிக் கொடுப்பது, பின்பு கட்டிக் கொள்வது, கூடுவது, கலைவது எல்லாம் ஒரு கட்சியின் உள் விவகாரம்…. அதைப் பற்றிக் கவலை நமக்கில்லை. ஆனால் அந்தக் கட்சியின் கையிலிருக்கும் ஆட்சி… அதன் செயல்பாடுகள்.. யாவும் ஆட்சிக்கு வாக்களித்து வாழ்க்கை சிறக்கும் என்று வாய்பிளந்து காத்து நிற்கும் கடைக்கோடி அப்பாவியான நம்பிக்கைக்கு வேட்டு வைப்ப தை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்.
அனுபவமும் மக்களால் நான்… மக்களுக்காகவே நான்… என்று மக்களைத் தன்பக்கம் மட்டுமே வைத்திருந்த வசீகரத்தாலும், மறு படி ஆட்சி… மறுமலர்ச்சி ஆட்சியாய் இருக்கும் என்று மத்தாப்பு ஒளி போன்று மலர்ந்திருந்த மக்களுக்கு அம்மாவின் அடிவருடிகளின் செயல்பாடுகள் புஸ்வான மாகிப் போயிருப்பது கதையல்ல நிஜமல்லவா ?
மக்களால் நான்… மக்களுக்காகவே நான் என்று மக்களை தன்பக்கம் மட்டுமே வைத்திரு ந்ததால், மறுபடி ஆட்சி.. மறுமலர்ச்சி ஆட்சியா ய் இருக்கும் என்று மத்தாப்பு ஒளி போன்று மல ர்ந்திருந்த மக்களுக்கு அம்மாவின் அடிவருடிக ளின் செயல்பாடுகள் புஸ்வானமாகிப் போயிருப்பது கொடுமை.
அம்மா இட்லி சாப்பிட்டாரா? இல்லையா? என்ற பட்டிமன்றமு ம் அணிக்கு அணி தாவல்களும்… அளுக்கொரு அறிக்கையும்… பச்சையா… காபியா விவகாரமும்… நம்பிக்கை இருக்கா… இல்லையா… சந்தேகமும்… அம்மாவுக்கு ஆனது என்ன விசார ணைக் கமிஷனும்… காலில் விழுந்ததது யார்? கெஞ்சியது யார் ? மிஞ்சியது யார்? என்ற குழாயடிச் சண்டைகளும் பாம்பு மாத்தி ரை வெடியிலிருந்து கிளம்பும் நாற்றமாய் நாறித் தமிழனின் மூச்சை முட்ட
வைக்கி றது.
அமைதியாய் இருக்கும் வாக்காளனின் கையில் இருப்பது வெறும் வாக்கு சீட்டல்ல … எவரையும் புரட்டிப்போடும் அணு குண்டு என்பதை… தொகுதியை மற்றவர்களுக்கு யார் புரிய வைப்பது?
மாநிலத்திற்கு சுய ஆட்சி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சுயமாய் ஆட்சி நடத்த முன்வாருங்கள். காட்சி அரசை, சாட்சி அரசாய் மாற்றி தமிழகத்தை ஒளிர வையுங்கள் என்பதே தீப ஒளித் திருநாளில் மக்களின் வேண்டுகோள்.
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்
திரு.உதயம் ராம் : 94440 11105
/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
Super Thalaiyangam.
Super Thalaiyangam.