கமல், மெர்சல் படத்தை எதிர்ப்பவர்களுக்கு ட்விட்டரில் பதிலடி
கடந்த தீபாவளி அன்று உலகம் முழுக்க வெளியாகி, ரசிகர்களின் ஏகோபித்த வர வேற்பை
பெற்றுள்ள மெர்சல் (MERSEL) திரைப்படம். இத்திரைப்படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி (GST), மற்றும் டிஜிட்டல் இந்தியா (INDIA DIGITAL) குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிரு ப்பதாக தமிழக பா.ஜ.க வினர் கடுமை யாக குற்றம்சா ட்டி வந்தனர்.
இந்த திரைப்படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை விரைந்து நீக்க வேண்டும் என தமிழ கத்தின் பா.ஜ•க• (BJP) தலைவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா. ஜ.க வின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையி ல் நடிகர் கமல்… மெர்சல் பட சர்ச்சை குறித்து தனது கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் , “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டு விட்டது. விமர்சனங்களை தெளிவான புரிதலு டன் கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாய டைக்க செய்யாதீர்கள். விமர்சனங்கள் தான் இந்தியா வை ஒளிர வைக்கும் ” என மெர்சல் படத்தை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல்.