Monday, December 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெர்சல் படக் குழு அதிரடி முடிவு – பாஜக தலைவர்களின் தொடர் கண்டனங்களால்

மெர்சல் படக்குழு அதிரடி முடிவு – பாஜக தலைவர்களின் தொடர் கண்டனங்களால்…

மோடி அவர்களின் தலைமையில் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து விமர்சன வசனங்கள் மெர்சல் திரைப்பட த்தில் இடம் பெற்றுள்ளன. இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த‌ பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற னர். 

தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ•க• தலைவர்களின் தொடர் கண்டனங்களால் இதனைத் தொடர்ந்துபடத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே படத்தை மறுபடியும் மறு தணி க்கைக்கு அனுப்ப வேண்டாம். அது ஏற்கனவே சான்றிதழ் பெற்ற படம் என்று கமல் கருத்துத் தெரிவித்திருந்தார். மேலும் விமர்சன ங்களை தர்க்கப் பூர்வமாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர விம ர்சகர்களின் வாயை அடைக்கக் கூடாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரியும் மெர்சல் ஒரு திரைப்படம்தானே என்று கேட்டிருந்தார். மெர்சல் திரைப்படத்தி ற்கு ஆதரவாக பெரும்பாலான‌ நடிகர்கள், நடிகைகள் மற்றும் அரசிய ல் தலைவர்கள் கருத்துக்களையும், பாஜக தலைவர்களு க்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து வருகி ன்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் மெர்சல் படத்தி ல் இருந்து நான்கு காட்சிக ளை நீக்க முடிவு செய்துள்ள தாக மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட காட்சி களை நீக்கக்கோரி வரும் 23 அல்லது 24ம் தேதியில் தணிக்கைக் குழுவி டம் தயாரிப்பாளர் தரப்பில் கடிதம் தரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய காட்சிகளை விஜய் ரசிகர்களும் மற்றவர்களும் சமூக வலைத்த ளங்களில் பரப்பி வருகின்றனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

  • The film gives wrong data about demonetisation and GST. Spreading wrong message is wrong. So deleting those wrong messages are correct.
    With regard to Mr.Kamal Hasan, he deleted many portions from his Viswaroopam, when a group of people objected to it. When he himself deleted some portions from the censored film, he has no right to advice now contrary to what he did earlier.

Leave a Reply