அகண்ட மார்பு – திரண்ட தோள்கள் பெற எளியதொரு பயிற்சி
ஆண்மைக்கு அழகு சேர்க்கும் அகண்ட (விரிந்த) மார்பு. இந்த விரிந்த அகண்ட மார்பு உடைய
ஆண்களை ரசிக்கும் பெண்கள் அதிகம் இருப்பார்கள். அந்த அகண்ட மார்பு விரிந்த மார்பு-ஐ நீங்கள் பெறுவதற்கான சில எளிய பயிற்சிகளை இங்கு காணவிருக்கிறீர்கள்.
முதலில் பரபரப்பின்றி, உடலையும் உள்ளத்தையும் சற்று அமைதி யாக வைத்துஃ கொண்டு, தரையில் கவிழ்ந்து படுக்க வேண்டும். அதன்பிறகு இரண்டு கைகளையும் (உள்ளங்கைகள் தரையில் படும் அளவுக்கு வைக்க வேண்டும்) இரண்டு பக்கம் வைக்க வேண்டும். உங்கள் கால்களின் பெருவிரல்களை தரையில் வைத்துக் கொண்டு, அப்படியே கைகளை அழுத்தி மேலே எழ வேண்டும் பிறகு மீண்டும் தரையில் படுங்கள். இவ்வாறு தினமும் இதை அதிக பட்சம் 30 வரை செய்யலாம். முதலில் கடினமாக இருக்கும் என்பதால் 10 முறை செய்தாலே போதுமானது. இதனால் தோள்பட்டை, கைகள் வலிமை பெற்று மார்பு விரிவடையும்.. தோள்கள் திரளும்.
குறிப்பு- இந்த பயிற்சியை அவசரம் அவசரமாக செய்தால், கழுத்து பகுதியில் தசைபிடித்துக் கொண்டு தீராத வலியை ஏற்படுத்தி விடும். .
— சத்தியமூர்த்தி