நாக்கில் தேன் தேய்த்து சில நிமிடங்கள் வரை வைத்திருந்தால்…
நாக்கு என்பதற்கு நா என்ற இன்னொரு வார்த்தையும் உண்டு. இந்த நாக்குதான்நாம்
நினைப்பதை பேசவும், ருசியான உணவுகளை ஒரு கைப் பிடிக்கவும் உதவுகிறது. பல நேரங்களில் காரமாக உணவுகளை சாப்பிடும்போது நாக்கு அதிக மாக எரியத் தொடங்கும் அல்லது எரியும். இதுபோன்ற உங்கள் நாக்கு எரியும்போது, அச்சமயத்தில் ஒரு ஸ்பூன் அளவு தேன் எடுத்து நாக்கில் முழுமையாக தடவவும்.அதன்பிறகு சில நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பிறகு அதன் சுவையை படிப்படியாக தொண்டைக்குள்ளே இறக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நாக்கில் உண்டாக எரிச்சல் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்.
=> சத்தியமூர்த்தி