தினமும் சந்தனப்பொடி ரோஜா நீர் கலந்த கலவையை தொடையில் தடவி வந்தால்…
மணம் வீசும் சந்தனமும், ரோஜா நீரும் அளப்பரிய மருத்துவ குணங்களை கொண்டு ள்ளது. இவற்றை
பயன்படுத்தி எப்படி அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்ட முடியும் என்பதை இங்கு காண்போம்.
அழகான தொடையில் திருட்டியாக இருப்பது கருமைதான். இந்த கருமை இறுக்கமான உடைகளை அணிவதாலும், சிற்சில நோய் தொற்றுக்களாலும் தான் உண்டாகிறது. தொடையில் படிந்த கருமை யை போக்க சில எளிய வழிகள் உண்டு.
சுத்தமான அசல் சந்தனைத்தை எடுத்து நன்றாக அரைத்து அதன் பொடியை ஒரு சிறு கிண்ணத்தில் இட்டு, அதில் போதுமான அளவு ரோஜா வாட்டர்-ஐ சேர்த்து கலக்க வேண்டும்.
பிறகு நன்றாக கலந்த அந்த கலவையை எடுத்து தொடையில் கருமை நிறமுள்ள பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை உலர வைக்கவேண்டும் அதன்பிறகு சுத்தமானநீரில் கழுவவேண்டும். இதுபோன்றே தினமும் செய்துவந்தாலே போதும் உள்தொடை யில் இருக்கும் கருமை நிறம் முற்றிலும் மறைந்து உங்கள் தொடை இழந்த அழகையும் பொலிவையும் மீண்டும் பெறும்.
சந்தனப் பொடியை… கடையில் விற்கப்படும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உள் தொடையில் இருக்கும் கருமை நீங்கி, பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.