தொடையில் எலுமிச்சை சாற்றுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தினமும் தடவி வந்தால்…
காற்றைப்போல இந்த எலுமிச்சையும் அது நுழையாத இடமே இல்லை எனலாம். எலுமிச்சையில் அந்தளவுக்கு
மருத்துவ பண்புகள் இருக்கிறது. ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொண்டால், இது எலுமிச்சை அளவுக்கு இல்லையென்றாலு ம் இதிலும் சில மருத்துவ பண்புகள் உண்டு
பொதுவாக நமக்கு குறிப்பாக சொல்லப்போனால் பெண்களு க்கு அவர்களின் முகம், கை மற்றும் கால்கள் எவ்வளவுதான் சிகப்பாக அழகாக இருந்தாலும் அவர்களின் உள்பக்க தொடை கருப்பாக இருந்தால் அவர்கள், முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணியவே தயக்கமாக இருக்கும்
இந்த கருமை எப்படி வருகிறது என்றால், பொதுவாக இரண்டு கால்களின் தொடை (Thigh) ஒன்றோடொன்று உரசிக்கொள்வ தால் அங்கே கருமை உண்டாகிறது. அது மட்டு மின்றி, இன்னும் வேறு சில காரணங்களாலும் சருமத்தில் கருமை ஏற்படும். அதிலும் மிகவும்குண்டாக இருப்பது, அடிக்கடி ஷேவிங் செய்வது, காற்றோட்டம் இல்லாதது, வயதாவது, சருமம் வறட்சிடை வது போன்றவற்றாலும் சருமமானது கருமையாகலாம்.
மேலும் தற்போது ஜீன்ஸ் அணிவோரின் எண்ணிக்கைதான் அதிகம். அத்தகைய ஜீன்ஸ் அணிவதால், அவை சருமத்தில் அதிகம் உரா ய்ந்து, அவையும் சருமத்தை நாளடைவில் கருமையாக்குகின்றன. ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும், அவையும் சருமத்தை கருமையாக மாற்றும்.
அத்தகையவர்கள், அவர்ளின் உள்தொடையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அப்பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நாளடைவில் கருமையாக இருக்கும் இடத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.