மெர்சல் விஜய்-ஐ பாராட்டிய ரஜினி… பாஜக-வை புறக்கணிக்கிறாரா – புதிய சர்ச்சை
கடும் சர்ச்சைகளுக்கு இடையே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்யின் மெர்சல் படத்தை
நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர், “முக்கியமான கருத்தை பற்றி பேசியுள்ளார்கள். மெர்சல் படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்” என எழுதினார்.
இந்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தான வசனங்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க மேற்கண்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியது.
இதனையடுத்து, மெர்சல் திரைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிடோர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதனால் மெர்சல் விவகாரம் தேசிய அளவில் ட்ரெண்டிங் அடித்து வருகிறது. மேலும், தமிழ் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் மெர்சலுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டு ள்ளது. மெர்சல் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்தின் டுவிட்டருக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்து, உங்கள் ஆதராவுக்கு நன்றி என பதில் டுவிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக தொடர்ச்சியாக மெர்சலுக்கு எதிராக பல கண்டனங்களை தெரிவித்தும் எதிராக பேசி வரும் இவ்வேளையில் ரஜினி மெர்சல் விஜயை பாராட்டி இருப்பதன் பின்னணி… ரஜினி… பாஜகவை புறக்கணிக்கிறார் என்ற பேச்சும் எழுகிறது.