Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குண்டர் சட்ட‍ம் – அதன் அதிகார வரம்புகள் குறித்த அதிமுக்கிய தகவல்கள்

குண்டர் சட்ட‍ம் – அதன் அதிகார வரம்புகள் குறித்த அதிமுக்கிய தகவல்கள்

சமீப காலமாக தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களின் அதிகம் அடிபடும் ஒரு

சட்ட‍ம் எது என்றால் அது குண்டர் சட்ட‍ம் தான். அந்த குண்டர் சட்ட‍ம் (Goondas Law) குறித்த அதி முக்கியத் தகவல்கள் இங்கு காண்போம்.

குண்டர் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் சட்டத்தின் முழுபெயர், “தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதை ப்பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாய கரச் செயல்கள் தடுப்புச் சட்டம்”.

#குண்டர் சட்டம் என்றால் என்ன?,

இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரிகள் ஒருவரை சிறையில் தள்ள முடியும். நகர்ப்புறங்களில் காவல்துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

அதன் அதிகார வரம்புகள் என்ன?

குண்டர்கள் என்ற வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தி ன் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்ய க்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவின் உறுப்பினர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சரியா என்ப தை நீதிபதி உள்ளிட்டோரைக்கொண்ட ஆலோசனை குழு முடிவு செய்யும். அக்குழு முடிவு செய்தாலும் உயர்நீதி மன்றத்தை அணுகி நிவாரணம் பெற முடியும்.

குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். மாநில அரசு விரும்பினால் முன்கூட்டி யே விடுவிக்கலாம்.

இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்க ப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

2006-ஆம் ஆண்டில்தான் திரையுலகினரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்படங்களைத் திருட்டுத் தனமாக பதிவு செய்வது, சி.டி.க்களில் பதிவுசெய்து விற்பதும் குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

=> ராசா துரியன் வழக்கறிஞர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: