சட்டவிரோதம் – ஐ.டி.(IT) ஊழியர்களை இனி காரணமின்றி வேலையை விட்டு நீக்கினால்… – புது தகவல்
இனி ஐ.டி. (Information Technology – IT ) ஊழியர்களை காரணமின்றி வேலையை விட்டு நீக்கமுடியாது, எப்.ஐடிஈ என்ற
ஐ.டி. தொழிலாளர்கள் அமைப்பின் செயலாளர், திரு. வினோத் நம்மிடம் இனி இந்த பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு நீதி மன்றம் மூலம் உரிமை பெறப்பட்டுள்ளது. ஐ.டி. ஊழியர்கள் பிரிவு போட்ட ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கொடு த்த உத்தரவை ஒட்டி, சில முக்கிய முடிவுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. “அனைத்து ஐ.டி. மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவை நிறுவனங்களுக்கும் 1947 பிரிவு 2(1) என்ற தொழில் தகராறு
சட்டம் பொருந்தும் என்பதே அது என்றார்,
இனி ஐ. டி. ஊழியர்களை காரணமின்றி வேலையை விட்டு நீக்க முடியாது.!
இது பற்றி விளக்கமாக பகிர்ந்தார் எப்.ஐ.டி.ஈ. தலைவர் வசுமதி… “இந்த உத்தரவின் மூலம் சங்கம் அமைத்து கொள்ளும் உரிமையு ம், தொழிலாளர் சட்டத்தின்கீழ் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கொள்ளும் உரிமையும், தொழிலாளர் சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சினை களையும் தீர்த்து கொள்ளும் உரிமையும் ஐ. டி. ஊழியர்களுக்கு உண்டு என தமிழ்நாடு அரசு உறுதிபடுத்தி உள்ளது. இனி ஐ.டி.யி ல் பணியாற்றுபவர்களை தொழிலாளர் என்றே அழைக்கலாம். சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யபட்டால், சங்கத்தின் மூலம் தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்து புகார் கொடுக்கலாம்.
அவ ர்கள், நிறுவனத்தை சேர்ந்தவர்களை அழைத்து, ஒரு முத்த ரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இதில் பலன்கிடைக்கவில்லை என்றால், நீதிமன்றம் மூலம் சட்டபடியான நிவாரணங்களை பெற முடியும்.
இனி ஐ. டி. ஊழியர்களை காரணமின்றி வேலையை விட்டு நீக்க முடியாது.!
துணைதலைவர் ராஜன்காந்தி, “வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஐ.டி பெண் தொழிலாளருக்கு, இந்த தொழில் சட்டம் மூலம் மீண்டும் வேலையை பெற்று கொடுத்தோம். மற்றொ ருவரின் வேலை நீக்கத்தை, தொழிலாளர் நீதிமன்ற
ம் மூலம் ரத்து செய்ய வைத்திருக்கிறோம். இப்படி, ஐந்தாயிரத்துக்கும் மேலான ஐ.டி. பணியாளர்கள் எங்களிடம் உதவிக்காக அணுகி உள்ளனர். இச்சட்டத்தின் மூலம் ஐ.டி. தொழிலாளர்கள் தங்களு க்கான நியாயங்களை பெறலாம்,”என்றார்.
இனி ஐ. டி. ஊழியர்களை காரணமின்றி வேலையை விட்டு நீக்க முடியாது. என்பதை உணர்ந்து அதற்கேற்ப விழிப்புடன் செயல்பட வேண்டும்.
=> ராசா துரியன், வழக்கறிஞர்