வாழைப்பூ – அடிக்கடி சமைத்து சாப்பிடும் ஆண் – பெண் இருவருக்கும். . .
பிறரது நன்மைக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒப்புயர்வற்ற மரம்… வாழைமரம் என்றால் அது மிகையல்ல• வாழையின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றிலும் மனிதர்களுக்கு தேவையான அனை த்து ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்க ளை கொண்டுள்ளது. வாழையிலேயே வாழை பூ சற்று வித்தியாசமானது…
இந்த வாழைப் பூ (Banana Flower) வை பயன்படுத்தி வாழைப்பூ பொரியல், வாழை ப்பூ வடை, வாழை ப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைத்தால் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கும். மேலும் சில வியாதிகளையும் விரட்டி அடிக்கும் சக்தி படைத்த து.
இந்த வாழைப்பூவில் உணவு சமைத்து சாப்பிடும் ஆண்களுக்கு ம் பெண்களுக்கும் உண்டாகும் ஆரோக்கியமான நன்மைகளை இங்கு காண்போம்.
1)பெண்களுக்கு மாதவிடாய் (menstruation, menses, catamenia, Menopause) சீராகும்.
2) ஆண்களுக்கு தாது விருத்தி (Healthy Sperm Increase) அடையும்.
3) ஆண் பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை (Infertility) யை போக்கும்
4) உடல் சூடு (Body Heat) குறையும். குடல் புண் (Ulcer) ஆறும்.
5) மூலநோய் (Hemorrhoids) கட்டுக்குள் வரும்.
6)கணையம் (Pancreas) வலிமைபெற்று உடலுக்கு தேவையான இன்சுலி னை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
குறிப்பு-1) வாழைப்பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் நடு வில் இருக்கும் நரம்பு போன்றபகுதியை கண்டிப்பாக நீக்கி விட்டு பிறகு சமைக்கவும்.
குறிப்பு- 2) வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த 2 நாட்களுக்குள் சாப்பிட்டால் ஆரோக்கியம்தரும். 2 நாட்களுக்கு மேல் வாழைப்பூவை இருப்புவைத்து சமைத்தால் ஆரோக்கிய சீர்க்கேட்டைத் தரும்
– கஜேந்திர சர்மா