Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலையை மென்மையாக கோதிவிடு – அமைதியாகத் தூங்கட்டும் உங்கள் செல்லக் குழந்தைகள்

தலையை மென்மையாக கோதிவிடு – அமைதியாகத் தூங்கட்டும் உங்கள் செல்லக் குழந்தைகள்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

என்ற வள்ளுவரின் வாக்கு எந்தளவுக்கு உண்மை என்பது குழந்தைப்பேறு கிட்டியவர்களுக்கு

தெரிந்திருக்கும்.

பச்சிளங் குழந்தைகள் விளையாடும்போதும், சிரிக்கும் போ தும் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அவை இரவில் நிம்மதியாக தூங்கவில்லை என்றால் அவ்வளவு தான் குழ ந்தையின் பெற்றோர் தூக்கமின்றி தவித்து விடுவார்கள்.

நாள் முழுவதும் வேலை செய்த களைப்போடு இரவில் தூங்க ச்செல்லும் அவர்கள், குழந்தைகள் தூங்காமல் சதா அழுது கொ ண்டேயிருந்தால் கோபமடையவும் செய்வார்கள். அதற்காக குழந்தையை அடித்தோ மிரட்டியோ தூங்கவைக்க முற்பட க்கூடாது. தூக்கமின்மை என்பது சிறியவர்கள் முதல் பெரியவ ர்க ள் வரை எல்லோ ரையும் பாதிக்கும் விஷயம்.

நமக்கு இருக்கும் வேலைகளின் அவசரத்தில் தூங்கு, தூங்கு என அதட்டியோ, வேக வேகமாக தொட்டிலை ஆட்டியோ தூங்க வைத்தால் குழந்தைகள் தூங்காது. அதட்டல் பயத்திலேயே தூக்கத்தை மறந்து அழ ஆரம்பி த்துவிடும். அப்படி இரவில் தூங்கமறுக்கும் குழந்தைகளை, எளிதில் தூங்க வைக்கும் டிப்ஸ் இதோ…!

* குழந்தைகளை பகல்வேளையில் விளையாட வைத்துவிட்டு, மாலையில் அவர்களை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வே ண்டும். இல்லாவிட்டால், இரவில் தூங்காமல் விளையாடிக் கொ ண்டே இருப்பார்கள்.

* தினமும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை பின்பற்றினால், குழந்தைகள் அத ற்கேற்றாற்போல் தங்களை விரைவில் மாற்றிக்கொள்வார்கள்

* இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி விட்டால், அவர்களுக்கு தானாகவே தூக்கம் வந்து விடும்.

* தனிமை பயமின்றி தாயின் அரவணைப்பு கிடைத்தால் எப்பேற்பட்ட குழந்தையும் விரைவில் தூங்கிவிடும்.

* கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மன நிலை அமைதியாகும். அப்போது சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். பெற்றோருடனும் குழந்தை க்கு இருக்கும் உறவும் இதன் மூலம் சிறப்படையும். குழ ந்தைக்கு மனோ வளர்ச்சியும் ஏற்படும்.

* மென்மையாக தாலாட்டுப் பாடினால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவார்கள்.

* குழந்தைகளை தினமும் ஒரே இடத்தில் தூங்க வைப்பது நல்லது. தலையை மென்மையாக கோதிவிடுவது, தட்டிக் கொடுப்பது போன்ற செயல்களால் அம்மாவின் அரவணப்பை உணர்ந்து குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அதே சமயம் எல்லா சூழ்நிலையிலும் குழந்தை யை தூங்கவும் பழக்கவேண்டும். அதா வது தொட்டில், மெத்தை, தரை விரிப்பு, மடி என்று எல்லா இடத்திலும் குழந்தையை தூங்கச்செய்ய வே ண்டும். குழந்தை அதற்கு பழகிக்கொண்டால் மட்டு மே அதனை எல்லா இடத்தி ற்கும் எடுத்துச்செல்ல முடியும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: