Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னை கவர்ந்த நட்சத்திரம் ARS – நடிகர் மட்டுமல்ல‍ சிறந்த மனிதநேயர்

என்னை கவர்ந்த திரை நட்சத்திரம் திரு. ARS – நடிகர் மட்டுமல்ல‍ சிறந்த மனிதநேயர்.

க‌டந்த மார்ச் மாதம் 24-தேதியிட்ட‌ தினமணியின் இணைய நாளிதழை தற்செயலாக கண்டேன். அதில்

வெளியான அட நம்ம ARS! பார்த்து ரொம்ப நாள் ஆச்சே… எங்கே போயிட்டார் இத்தனை நாளா!? என்ற தலைப்பில் வெளியான கட்டுரை இல்லை இல்லை ‘படி’தேன் அதனை நான் படித்தேன். அருமை, அற்புதம், திரு.ARS அவர்கள் எப்ப‍டி நாடக நடிகராக ஆனது குறித்தும் ஓ.ஜி. மற்றும் சோ அவர்களின் நட்பால் அவர் எப்ப‍டி நாடக துறையில் தொடர்ந்து நடித்ததையும் குறிப்பிட்டிருந்தார். அவர் நடிகர் திலகம் சிவாஜி அவர்களு டனான அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரது அனுபவங்களை நான் படிக்கும்போது என் நினைவுகள் தானாகவே மலர்ந்தது அது  குறித்த கட்டுரைதான் இது.

திரு.ARS அவர்கள் நிறைய திரைப்படங்களில் நிறைய நடித்திருந்தாலும், எனக்கு திரு.ARS அவர்களை அறிமுகம் செய்து வைத்தது என்ன‍மோ 90-களில் சன் தொலை க்காட்சியில் மதிய வேளையில் ஒளிபரப்பான நிறங்கள் நெடுந்தொடர்தான். அந்த தொடரை, திரு.ARS அவர்களுக்காகவும், நடிகை ரேவதிக்காகவும் தொடர்ச்சியாக ஒருநாள் கூட தவற விடாமல் பார்த்து மகிழ்ந்தேன். இதற்காகவே எனது வேலை யைக்கூட‌ ஷிஃப்ட் முறையில் மாற்றிக் கொண்டேன். எனது பணியும் பாதிக்காமல், அதேநேரத்தில் திரு.ARS அவர்களது நாடகத்தையும் தவற விடாமல் பார்த்து மகிழ்ந்தேன்.

அந்த நாடகத்தில் திரு.ARS அவர்களுக்கும் ரேவதி அவர்களு க்கும் உள்ள‍ அப்பா-மகள் உறவு என்னை வெகுவாக கவர்ந்த து. அந்நாடகத்தில் ரேவதி… திரு.ARS அவர்களது சொந்த மகள் அல்ல, ஆனாலும் அன்பால் பாசத்தால், உருவான அந்த அப்பா மகள் பாசப்பினைப்பை நான் வெகுவாக கண்டு ரசித்தேன். மகிழ்ந்தேன்.

அந்த நிறங்கள் தொடரில் பல காட்சிகள் என் மனத்தில் நீங்காமல் இன்றளவும் இருக்கின்றன• அந்த காட்சிகளில் ஒன்றினை இங்கு உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். திரு.ARS அவர்கள்.. ரேவதி அவர்களுக்கு ஒரு செல்போன் வாங்கி அதனை பரிசாக கொடுப்பார் அச்ச‍மயத்தில் அந்த செல்போனை பெற்றுக் கொண்ட ரேவதி அவர்கள்… ஆச்சரியத்துடன் போன் எனக்கா என்று கேட்டுவிட்டு, மாதம்தோறும் வரும் பில்லை உங்களுக்கு ( திரு.ARS அவர்களுக்கு) அனுப்பி விடு கிறேன் என்று சொல்வார். அதற்கு திரு.ARS அவர்களோ… அவரை செல்லமாக அடிக்க‍ முற்படுவதுபோலவும், அதற்கு ரேவதி அவர்கள் சற்று பயந்து அதனை தடுக்க‍ முயல்வது போலவும் காட்சிகள் இருக்கும் அவ்வ‍ளவு அருமை அற்புத மான காட்சி அது.

தொலைக்காட்சிகளில் எத்த‍னையோ தொடர்கள் வித்தியா சமான கதை கோணங்கள் என்றபெயரில் தற்போதும் ஒளிபரப்பாகிக் கொண்டிரு க்கின்றன• தற்போது எனது பணிச்சுமைகளினாலும், தொடர்களின்மீது வந்த வெறுப்பாலும் தொடர்கள் பார்ப்ப‍தை நிறுத்தி விட்டேன். ஆனால் மேற்படி நிறங்கள் நெடுந்தொடரைபோல் ஒரு சிறப்பான தொடர் இதுவரை இல்லை என்றே சொல்ல‍லாம். அந்த நாடகத்தின் சிறப்பே திரு. ARS அவ ர்களின் கதாபாத்திரமும், ரேவதி அவர்களின் கதாபாத்திரமும் தான். திரு.ARS அவர்களுக்கு மனைவியாக வரும் சி.ஐ.டி. சகுந்தலா அவர்களும் தனது நடிப்பினை வெகுவாக வெளிப்படு த்தியிருப்பார். அவருக்கும் எனது பாராட்டுக்கள்.

கவிதை எப்ப‍டி கவிதையாக இருந்தால் சுவைக்குமோ அதேபோல் நிறங்கள் தொடர், தொடராக சுவைத்தது.


அன்புடன் ரசிகன்
விதை2விருட்சம் சத்தியமூர்த்தி
www.vidhai2virutcham.com
vidhai2virutcham@gmail.com
 

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும் 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: