Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவ வழிபாட்டில் சீர்மிகு சில விதிமுறைகள் – அவசியம் படிங்க

சிவ வழிபாட்டில் சில விதிமுறைகள் – அவசியம் படிங்க

சிவ வழிபாட்டில் சில விதிமுறைகளை வழிபாடு செய்யும் பக்தர்கள்..  கண்டிப்பாக

கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

சிவாலயத்திற்குச் செல்லும்போது நீராடி உலர்ந்த ஆடை தரித்து தூய்மையாகச் செல்ல வேண்டும். திருக்கோயில் திருக்கோபுரத்தை த் தரிசித்து சிவநாமங்களை உச்சரித்து உள்ளே போக வேண்டும்.

முதலில் பலிபீடத்தையும் கொடி மரத்தையும் ரிஷப தேவரையும் கும்பிடல் வேண்டும். வடக்கு, மேற்கு நோக்கிய சந்நதியாயின் இட ப்ப க்கத்திலும் கிழக்கு, தெற்கு நோக்கிய சந்நதியாயின் வலப்புறத்திலும் நின்று வணங்க வேண்டும்.

வீழ்ந்து வணங்கும்போது தலை, 2 செவிகள், 2 கைகள், கால்கள், முகம் இவை நிலத்தில் படும்படி ஆண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

தலை, 2 கைகள், முழங்கால்கள் இவை பூமியில் பதிய பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கா ரம் 3, 5 அல்லது 7 தடவை செய்தல் நலம்.

கீழே விழுந்து வணங்கும்போது மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் கால் நீட்ட வேண்டும். கிழக்காகவும் வடக்காகவும் நீட்டக் கூடாது.

கொடிமரத்தைக் கடந்து உள்ளே சென்றபின் எந்த இடத்திலும் வீழ்ந்து வணங்குதல் கூடாது.

நமஸ்காரம் செய்தபின் திருநாமம் உச்சரித்து அடிமேல் அடி வைத்து மெல்ல வலம் வரவேண்டும்; தெய்வவாக னங்களை யும் சேர்த்துத்தான் வலம் வர வேண்டும்.

ஒரே திருக்கோயிலில் உள்ள கணபதி-முருகன்- அம்பாள் சந்நதிகளை தனித்தனி யாக வலம் வரக் கூடாது. சேர்த்துப் பொதுவாக வலம் வர வேண்டும்.

வஸ்திரங்களால் உடலை மூடிக் கொண்டு வலம் வரவோ, வழிபடவோ கூடாது.

வலம் வந்த பின்னர் துவார பாலகரை வணங்கி, நந்தி தேவரைத் துதித்து உள் செல்ல வேண்டும்.

விநாயகரை தரிசித்து, பின் சிவனையும்-தேவியையும் வழிபட்டு, பின்னர் சபாபதி, தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர் முதலிய மூ ர்த்திகளையும் சமயக் குறவர்களையும் வழிபட வேண்டும். வழிபட்டதும் வடக்காக சண்டிகேஸ்வரரை அடைந்து மூன்று முறை மெலிதாகக் கை தட்டி பிரார்த்திக்க வேண்டும்.

பின் வலமாக வந்து நந்தி தேவரின் இரண்டு கொம்புகளின் இடை வெளி வழியாக பெருமானை தரிசித்து, பலிபீடத்திற்கு இப்பால் மும்முறை வீழ்ந்து வணங்க வேண்டும்.

=> மாலைமலர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: