Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால்

நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால்…

ந‌மது உடலுக்கும் ஆரோக்கியத்தையும் உள்ள‍த்துக்கு உற்சாகத்தையும் அள்ளித்த ரக் கூடிய

பல உணவு வகைகளை நம் முன்னோர்களால் கண்டறியப்ப ட்டுள்ள‍து. அத்தகைய உணவுவகைகளில் இந்த நார்ச்சத்து உணவுகளும் ஒன்று.

நீரில் கரையக்கூடிய, திரவங்களில் கரையும் நா ர்ச்சத்து, கரைந்தவுடன், ‘ஜெல்’ போல் ஆகிவிடும். இந்த கரையும் நார்ச்ச த்து பெரும்பாலும், பெக்டின் உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி உமி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற ‘சிட்ரஸ்’ பழங்கள், ஆப்பிள் கோது, தானியம், பருப்பு இவை கரையும் நார்ச்சத்து உள்ளவை. கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

கரையாத நார்ச்சத்த, செல்லுலோஸ், ஹெமி செல்லுலோ ஸ், லிக்னின் உள்ளவை. இவை பல தானியங்களில், பழ ங்கள், காய்கறிகள் (ஆப்பிள்தோல், முட்டைகோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட் போன்றவை) இவற்றில் உள்ளவை. கரையாத நார்ச்ச த்து ஜீரணத்திற்கு உதவும். மலச்சிக்கலை போக்கும்.

உணவில் நார்ச்சத்து சேர்த்துக் கொள்வதால், நுரையீர ல், பிராஸ்டேட், கணைய புற்றுநோய்கள் தடுக்கப்படுகி ன்றன. அதுவும் சைவ உணவு உண்பவர்களுக்கு நார்ச்ச த்து அதிகம் கிடைக்கிறது.

கரையும் நார்ச்சத்து கொழுப்பு, அதுவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கொலஸ்ட்ராலை உடல் கிரகிப்பதை குறை க்கிறது. பித்தஉப்பு, கொழுப்பு அமிலங்களை ‘ஸ்பான்ஜ்’போல் உறிஞ்சி , மலமாக வெளி யேறுகிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்ப டும் தவிர உயர்ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கிறது. இன்சுலீன் அளவு களை அதிகமா க்குகிறது. நீரிழிவு நோயாளிகளில், சர்க்கரை செரிமா னத்தை மந்தப்ப டுத்துவதால், அதிகளவு, திடீரென்று ஏறும் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. இது சர்க்கரைநோயாளிகளுக்கு நல்லது தானே.

கரையாத நார்ச்சத்து நீரை உறிஞ்சி மலத்திற்கு அடர்த்தியையும், திடத்தன்மையை கொடுக்கிறது. மலம் மிருதுவாகிறது. சுலபமாக வெளியேறுகிறது. இதனால் மலச்சிக்கல் மறைகிறது. மலச்சிக்கல் இல்லாவிடில் வயிறு, குடல்களின் அழற்சிகள் தடு க்கப்படுகின்றன. மூலம், குடல்களில் உண்டாகும் புற்றுநோய்கள் தடுக்கப்ப டுகின்றன.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அடிவயிற்று சங்கடம் மற்றும் எரிச்சலூட்டும் வயி ற்று சங்கடம், டைவர்டிகுலா (ஜீரணமண்டல பாகங்களில் அழற்சி), போன்ற வயி ற்றுக் கோளாறுகளை குணமாக்குகின்றன.

கரையாத நார்ச்சத்தினால் வயிறு நிரம்பிய உணர்வை, திரு ப்தியை உண்டாக்குகிறது. அதிக நேரம் வயிற்றில் தங்குகிற து. பசியை தூண்டும் இன்சுலீனை கட்டுப்படுத்துகிறது. இந்த செயல்பாடுகளால் பசி எடுப்பதில்லை. இது உடல் எடையை அதிக மாக்காமல் பாதுகாப்பதால், குண்டானவ ர்களுக்கு எடை குறைய உதவுகிறது.

– நிவேதா

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: