Monday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்

 

இதை படிக்காம போகாதீங்க – மீடியா வெளிச்சம்படாத‌ ஒரு நட்சத்திரம் குறித்த‌ சுவாரஸ்யத் தகவல்கள்

தமிழ்த் திரையுலகம் எண்ண‍ற்ற‍ நட்சத்திரங்களைக்கொண்டிருந்தாலும், அதில்

முத்திரைப் பதித்தவர்கள் சிலர்தான். அந்தவகையில் இங்கு நாம் காணவிருப்ப‍து உச்ச‍த்தில் இருக்கும் ஒரு திரை நட்சத்திரம் குறித்த தகவல்களைத்தான் பார்க்க‍ விருக்கிறோம்.

இவர்தான் நக்கலுக்கு நாயகன். ரசிகனின் சிரிப்புக்கு இவர்தான் முழு குத்த‍கை தாரர். ஏட்டிக்கு போட்டியாக பேசுபவர், எட்டி உதைப்பதில் எத்த‍ன். திட்டுவதற்கெ ன்றே புதிய வார்த்தைகளை உருவாக்கியவர். தன் சக நடிகரின் வெகுளி கேள்விக ளுக்கு திரையில் முழி பிதுங்க முழிப்பவர். என்னங்க இன்னுமா நீங்க கண்டுபிடிங்கல• கண்டுபிடித்தவர்கள் மேற்கொண்டு படிங்க• கண்டுபிடிக்காதவங்க யோசிங்கப்பா அ யோசிங்கப்பா ஏ யோசிங்கப்பா இ யோசிங்கப்பா

மேற்சொன்ன வரிகளுக்கு பொருத்தமானவர் கலக்க‍ல் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி (actor gounda mani) தாங்க• நடிகர் கவுண்டமணியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் கன்னம்மபாளைய ம் அருகே உள்ள பல்ல கொண்டாபுரம். இவரின் சொந்த பெயர் சுப்பிரமணி. இவருக்கு சிறுவயதில் இருந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் நாடக கொட்டகையிலேயே காலத்தை கழித்தார்.

ஒரு முறை அவரது ஊரில் நாடகம் போட்டார்கள். அதில் இவர் கவுண்டர் வேடம் ஏற்று நடித்தார். இவரின் நடிப்பை பார்த்தவர்கள் அசந்துபோய் சுப்பிரமணியை அன்று முதல் கவுண்டமணி என்றே அழைத்தார். இவருக்கு 15 வயதாக இருக்கும் போது சகோதரி மைலாம்பாள் சென்னை அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனி யில் சேர்த்து விட்டார்.

ஆரம்பத்தில் சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கி ளி போன்ற பட ங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். பின்னர் 16 வயதினிலே படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்ய ப்பட்டார். அதன்பிறகு அவர் காமெடியில் பெரிய அளவில் வலம் வந்தார். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் செந்திலுடன் சேர்ந்து 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வசனத்தில் அனைவரையும் வெளுத்து வாங்கும் கவுண்டமணி சிறு வயதில் யாரிடமும் அதிகம் பேச மாட்டாராம். இவரது மனைவி சாந்தி. இவரை கவு ண்டமணி காதலித்து திருமணம் செய்துகொண்டார். செல்வி சுமித்ரா என்ற 2 மகள்கள் உள்ளனர். கவுண்டமணி தமிழ் சினிமாவின் கலகல கலைஞன். அவரைப் புறக்கணித்து தமிழ் சினிமா சிரிப்பு சரித்திரத்தை எழுத முடியாது. கவுண்ட மணியின் சில மணியோசைகள் மட்டும் இங்கே…

‘சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பே ட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! கவுண்ட மணிக்குப் பெரிய படிப்பெ ல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். ‘பார்த்தா ல் காமெடியன், படிப்பில் அறிவாளி’ என்பார் இயக்குநர் மணிவண்ணன்!. பாரதிரா ஜாதான் ‘கவுண்டமணி’ எனப் பெயர் மாற்றினார். ‘16 வயதினிலே’தான் அறிமுகப் படம்!

அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டு த்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போது தான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

கவுண்டமணியை நண்பர்கள் செல்லமாக அழைப்பது ‘மிஸ்டர் பெல்’ என்று. கவு ண்டமணியே நண்பர்களைப் பட்டப் பெயர் வைத்துத்தான் கூப்பிடுவார். அவை யாரையும் புண்படுத்தாது. நகைச்சுவையாக மட்டுமே இருக்கும். ஆரம்ப கால நண்பர் மதுரை செல்வம் முதல் அனைவரிடமும் இன்று வரை நட்பினைத் தொட ர்ந்து வருகிறார்!

மிகப் பிரபலமான கவுண்டமணி – செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கி றா ர்கள். இது ஓர் உலக சாதனை! இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோ வாக மட்டும் நடித்த படங்கள் 12.

கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு. எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட ‘சரி’ என்பார். ‘இங்கி லீஷ் கலருடா ப்ளாக்!’ என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்-கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்! உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு. ‘பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா’ என நண்பர்க ளுக்கு அறிவுறுத்து வார். பக்கா சைவம்!

திருப்பதி ஏழுமலையான்தான் கவுண்டமணி விரும்பி வணங்கும் தெய்வம். நினை த்தால் காரில் ஏறி சாமி தரிசனம் செய்து திரும்புவார். வாராவாரம் நடந்த தரிச னத்தை இப்போதுதான் குறைத்திருக்கிறார் கவுண்டர்! சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜுன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்!

புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டி கள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது. தனிமை விரும்பி! . ஓஷோவின் புத்தகங்களுக்கு ரசிகர். அதே மாதிரி ஹாலிவுட் படங்களைத் தவறாமல் பார்த்து, நல்ல படங்களை நண்பர்களுக்குச் சிபாரிசும் செய்வார்!

கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!. கவுண்டருக்கு எந்தப் பட்டங்களும் போட்டு க்கொள்ளப் பிடிக்காது. ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணி ட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார். ஒவ்வொரு சனிக்கிழமையும் நிச்சயம் பெருமாள் கோயில் தரிசனமும் விரதமும் உண்டு!

ஷூட்டிங் இல்லை என்றால், எப்பவும் சாயங்காலம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் முன்பு கவுண்டரைப் பார்க்கலாம். இப்போ து நண்பர்களைச் சந்திப்பது ஆபீஸ் மொட்டை மாடியில் மாலை நடைப் பயிற்சி யின்போதுதான்!

கார்களின் காதலன் கவுண்டர். 10 கார்களை வைத்திருக்கிறார். நெரிசல் நிரம்பிய இடங்களுக்கு சின்ன கார். அகல சாலைகள் உள்ள இடங்களுக்குப் பெரிய கார்களை எடுத்துச் செல்வார். ‘நம் சௌகர்யம் பார்த்தா பத்தாது… ஜனங்க நடமாட சௌகர்யம் கொடுக்கணும்’ என்பார்!

எண்ணிக்கையில் அடங்காத வாட்ச், கூலிங்கிளாஸ் கலெ க்ஷன் வைத்திருக்கிறார். நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே வந்த பழக்கம் இது!. டுபாக்கூர் சாமியார்க ளைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார். ‘மனிதனாகப் பிறந்தவ ர்களைத் தெய்வமா கச் சித்திரிப்பது ஏமாற்றுவேலை’ என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடி யேட்டரா எனச் சாட்டை வீசுவார். ஆனாலும், தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர்!

கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’ ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நடிகன்’. ‘அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோ ம், மார்லன் பிராண்டோவா நானு’ என சுய எள்ளலும் செய்து கொள்வார்!

‘மறக்க வேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை’ என அடிக்கடி குறிப்பிடு வார். ஒரு வரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்க ளை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்ப ர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப்போவார்!

சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகு குணமானார் கவுண்டர். அப்போது மருத்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்கா தவை. அதைப்ப ற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்!

– சுவாதி, வலைத்தமிழ்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: