Thursday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தரித்த பெண்களுக்கு – Dr. காமராஜ் தரும் ஆலோசனைகள்

கருத்தரித்த பெண்களுக்கு – மருத்துவர் காமராஜ் தரும் ஆலோசனைகள்

மாதவிலக்கு தள்ளிப்போகும்போது… தோன்றும் அறிகுறிகளை வைத்து உகந்த பரிசோதனை மூலம்

கர்ப்ப‍ம் (Pregnancy) என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வே ண்டும். பொதுவாக‌ நிறைய பேருக்கு கருப்பையில் குழந்தை வளரும் விஷயம் மட்டும் தெரியுமே தவிர, அதனோடு என்னவெ ல்லாம் சேர்ந்திருக்கும் என்ற விஷயம் தெரியாது.

கர்ப்பத்தை முழுமையாகப் பாதுகாப்பதற்கு தினமும் காலை யில் இளஞ்சூடான நீரில் குளிக்க வேண்டும். இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதற்கு கொஞ்சம் கூடுதல் சூடான நீரில் குளிக்கலாம்.

கர்ப்பிணி எட்டு மணி நேரம் உறங்கி ஓய்வெடுப்பது அவசியம். இயல்பான வேலை செய்தல், ஓடுவது, மாடியேறுவது போன்ற வற்றால் கருவிலுள்ள குழந்தைக்கு ஆபத்து வருமோ என நினைக்கிறார்கள். கண்டிப்பாக வராது. கருவானது பாதுகாப்பா ன பனி நீருக்குள் வைக்கப்பட்டுள்ளதால் எந்த வெளிச் செயல்பாடுகளும் அதற்கு சேதத்தை உண்டாக்காது.

கர்ப்ப காலத்தில் மார்பகக் காம்புகளில் சேரும் அழுக்குகளை சுத்தமாக துடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஈறு நோய்களால் அழற்சிகளும், பல் வேர் பாதிக்கப்பட்டால் கர்ப்பச் சன்னி நோயும் வரலாம் என்பதால் கருக்காலத்தில் பற்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

கர்ப்பத்தின் துவக்கத்தில் அடிக்கடி பாலுறவு கொள்வதை தவி ர்க்க வேண்டும். முன்னர் கருச்சிதைவு ஏற்பட்ட நிலை யில், அடுத்து கருத்தரித்தால் குழந்தையின் நிலைப்பாடு உறுதி செ ய்யப்படும் வரை பாலுறவு செயல்களைக் குறைத்துக்கொ ள்வது நல்லது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் கருவு ற்ற 6வது வாரம் முதல் 12வது வாரம் வரை பாலுறவை எச்சரி க்கையாக மேற்கொள்ள வேண்டும். 16 முதல் 31 வாரம் வரை சாதாரணமாக பாலுறவு கொள்ளலாம். கர்ப்பத்தின் இறுதி காலங்களில் பாலுறவு கொள்வதை தவிர்ப்பதும், அதனால் நோய்க் கிருமிகளின் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக்கொ ள்வதும் அவசியம்.

புரண்டு படுத்தால் குழந்தை கொடி சுற்றிப் பிறக்கும் எனக் கூறப்படு வது உண்மையல்ல. உட்கார்ந்து பிறகு மெதுவாக படுக்க வேண்டும். ஒருக்களித்துப் படுப்பதே நல்ல படுக்கை முறை. மல்லாந்து படுக்கு ம்போது கருப்பை இரத்தக் குழாய்களை அழுத்துவதால் மூச்சு த்திணறல், இரத்த ஓட்டக்குறை போன்றவை உண்டாகலாம்.

கால் வீக்கம், சர்க்கரை நோய், சிறுநீரில் அதிகமான உப்பு ஆகியவை இருந்தால் ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டும்.

பயணங்கள் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. கர்ப்பக் காலத்தில் ஆற்றைத் தாண்டுவதும், தாய் வீடு போய் வருவதும் தப்பான விஷய ங்களல்ல. குறை பிரசவ வாய்ப்பு மற்றும் கருச்சிதைவு அபாயம் இரு ந்தால் நெடுந்தூர பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

காய்ச்சல் அல்லது சளித் தொல்லை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனையில்லா மல் மருந்து மாத்திரை சாப்பிடக்கூடாது. சில மருந்து மாத்திரைக ள் குழந்தை பிறந்த பிறகு அவற்றின் பற்கள் மற்றும் எலும்புகளை சிதைத்து விடுபவை. 3 மாதத்திற்குப்பிறகு கர்ப்பிணி அருந்தும் மரு ந்துகள் நஞ்சுக்கொடி மூலம் குழந்தையை அடைந்து ஊனமுற்ற குழந்தைப் பிறப்பையும், வலிப்பு நோயையும் உண்டாக்கு ம்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை இருந்தால் அவற்றை கர்ப்ப த்திற்கு முன்னராகவே விட்டுவிட வேண்டும். இவை கருவை பாதிக்கும்.

– டாக்டர் டி.காமராஜ் (Dr. T. Kamaraj)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: