Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை

– மு.க.ஸ்டாலின் ஆவேசம்

மதுரையில் நடந்த ஜி.எஸ்.டி. (GST – Goods and Service Tax)  கருப்பு தின கண்டனக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் (Mr. M.K. Stalin) … “மக்களை

பாதிக்கும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் மாற்றம் வேண்டும் என வருவாய்த்துறைச் செயலர் பேட்டி அளிக்கிறார், பிரதமரே அதிகம்தான், மாற்றம் வேண்டும் என பின் வாங்குகிறார்” என்று  பேசினார்.

பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு (After demonetisation)  மத்திய அரசும், ரிசர்வ் வங்கி யும் (Central Government and Reserve Bank) 76 முறை மாறி மாறி பல அறிவிப்புக ளை வெளியிட்டன. அறிவுரைகளை வழங்கின. அறிவிப்புகள், அறிவுரைகள் யோச னைகள் வழங்கப்பட்டன. இவையெல்லாம் அறிவிப்பதற்கு முன்னர் பிரதமரோ, ரிசர்வ் வங்கியோ பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசித்தி ருக்க வேண்டும்.

திட்டமிட்டிருக்கவேண்டும். இதனால் வருகின்ற சங்கடங்கள், எதிர்கால பிரச்சினை பற்றி சிந்தித்திருக்க வேண்டும். இதே பிரச்சினையை மக்கள் தொடர்ந்து சொல்கி றார்கள். எதிர்க்கட்சிகள் நாங்களும் தொடர்ந்து சொல்கிறோம். பாஜக (BJP) கூட்ட ணிக் கட்சிகளே தொடர்ந்து எதிர்க்கிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் அறிவிக்க ப்பட்ட நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

சிறு குறு தொழில்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது, அமைப்புச்சாரா தொழி லாளர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் கணக்கிட்டுத்தா ன் எதிர்க்கிறோம்.

உலகப் பொருளாதார (World Economy) நிபுணர்கள் எதிர்க்கின்றனர். ஜி.எஸ்.டி. பிரச்சினை. அது அமல்படுத்தியதிலிருந்து பிரச்சினை தான். அதுவும் வணிகப் பெரு மக்கள் மத்தியிலும் பிரச்சினை. இதை திமுகவில், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த மூன்று மாத காலம் அவகாசம் கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவசர கதியில் அதை அமல்படுத்தினர். 28 சதவீத அதிகபட்ச வரியால், மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

மூன்று மாதம் கழித்து மத்திய அரசின் வருவாய்துறைச் செயலர் ஆதியா ஜிஎஸ்டி வரி விகிதம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேட்டி அளிக்கிறார். நிதியமைச்சர் தலைமையில் உள்ள கவுன்சில் என்ன முடிவு எடுத்துள்ளது என்றால், குஜராத் தேர்தல் (Gujarath Election) வந்துவிட்டது, பிரதமர்  (Prime Minister) அங்கு சென்று ஜி. எஸ்.டி வரிவிதிப்பு முறையில் மேலும் மாற்றம் கொண்டு வரப்படும் என்று பேசி விட்டு வந்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு அதிகம் என்று பல தரப்பினரும், ஜி.எஸ்.டி.யால் பலர் பாதி க்கப்படுகின்றனர் என்று எதிர்க்கட்சியினரும் எடுத்து வைத்த வாதத்தை ஏற்க மறு த்தனர், ஆனால் இப்போது பிரதமரே ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு வந்துளளார்.

இதுதான் உண்மை. பண மதிப்பு நீக்கத்தால் பாதிப்பு என்பதை அவர்கள் கட்சியைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் சுப்பிரமணியன் சுவாமியும் அதை எதிர்த்து கருத்துக்களை கூறிவருகின்றனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி எஸ்டி இரண்டும் மக்களை பாதிக்கிறது எனபதை மத்திய அரசுக்கு சுட்டிக் காட்ட வும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் திமுகவும் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டங்களை நடத்துகிறோம்.

எதிர்காலத்திலும் நடத்துவோம் என்பதை மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக சொல்லிக்கொள்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

=> தமிழ் இந்து

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: