சாப்பாட்டுக்குமுன் ஏலக்காய் டீ (Cardamom Tea) குடித்தால்…
மலைப் பகுதிகளில் இயற்கையாக விளைகின்ற மூலிகைகளில் ஏலக்காய் (Cardamom) -உம் உண்டு. இந்த
ஏலக்காய்க்கு சில மாற்று பயெர்களும் உண்டு. அவை ஏலம், ஆஞ்சி, துடி, சிற்றேலம். இந்த ஏலக்காயில் மருத்துவ பண்புகள் உண்டு. அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
சிலருக்கு அஜீரணம் மற்றும் வாயு கோளாறுகளால் தொல்லை தருவது ஏப்பம். இந்த ஏப்பத்தை முற்றிலும் போக்கி உண்ட உணவை விரைவாக செரிக்கவும், வாயு கோளாறுகளை நீக்கவும் ஓர் எளிய வைத்தியமுறை இதோ.
சாப்பாட்டு முன்பு ஏலக்காய் தேநீர் (டீ) குடித்து சில மணித்துளிகள் கழித்து சாப்பாடு சாப்பிட்டால்… உணவும் செரிக்கும். வாயு கோளா றுகள் நீங்குவதால் ஏப்பம் (Belching OR Eructation) வருவது கட்டு ப்படும் என்கிறது சித்த மற்றும் இயற்கை வைத்தியமுறைகள்.
மரு. சீத்தாராமன் எழுதிய குறிப்பிலிருந்து…