Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாநரகாட்சி – இது பிழையல்ல திருத்த‍ப்பட வேண்டியது

 

மாநரகாட்சி

– இது பிழையல்ல திருத்த‍ப்பட வேண்டியது

இந்த (நவம்பர், 2017) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்

தலைப்பை படித்தவுடன் எழுத்து பிழையோ என்று என்ன வேண்டாம். எழுத்தில்

பிழையிருந்தாலும் மன்னித்து விடலாம். ஆனால் செயலில் பிழைகளிருப்ப‍தால்தான் சென்னை மாநகராட்சி மாநரகாட்சியாக மாறியிருக்கிறது.

தெருக்களெல்லாம் குளங்களாகின• சாலைகளில் பல்லாங்குழியல்ல• 2015 பெரும் வெள்ளத்திற்குப் பிறகும் அரசும் நிர்வாகமும் எந்த அளவிற்குத் தூங்கியிருக்கிறது என்பதற்காக இந்த 6 மணி நேர மழையே கண்ணீர் மன்னிக்க‍வும் தண்ணீர் சாட்சி.

மழைவந்தபிறகு அமைச்சர்கள் வேட்டியை மடித்துக்கொண்டு வந்தனர். மாவட்ட‍ ஆட்சியாளர்கள் வந்தனர். அதிகாரிகள் விரைந்தனர். காவல்துறையினரும் மாநகராட்சி ஊழியர்களு ம் விடிய விடிய உழைத்தனர் என்பதற்காக பாராட்டலாம் என்று நினைத்தால் இத்தனை நாளாய் எங்கிருந்தீர்கள்? என்ன செய்து கொண்டிரு ந்தீர்கள் என்று கேட்காமல் இருக்க‍ முடியவில்லை. ( உள்ளாட்சி தேர்தல்னு ஒண்ணு இருக்கவே தெரியுங்களா?)

எங்கெல்லாமோ தூர்வாரிய எதிர்க்கட்சிகளால் ஏன் சென்னையில் தூர்வார முடியவில்லை. ஏரியோ, குளமோ குட்டையோ ஆறோ இருந்தாலல்ல்ல‍வா தூர் வாருவத ற்கு? நிர்ந்தர தீர்வு காணாதது அரசின் குறைமட்டுமல்ல‍… தீர்வுக ளை அரசுக்கு அக்கறையோடு கூறாத எதிர்க்கட்சி மற்றும் பொதுநல ஆர்வலர்களி ன் அமைப்புகளின் அக்கறையின்மையும்தான் இத்தனைக்கும் சென்னை M.L.A.க்க ளில் பெரும்பா லோனோர் எதிர்க்ட்சியினர் வேறு

டெங்கு காய்ச்சலிலிருந்து அமைச்சர்களை…. ஆளும் கட்சியினரை காப்பாற்றிய.. மெர்சல் காணாமல் போகச் செய்த.. மெர்சலுக்கு மெர்சல் தந்த ஊடகங்களால் வெள்ள‍ப் பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்கி பரபரப்பு கூட்டி, பச்சாதாபம் ஏற்ப‌டுத்தி காசு பார்க்க‍ முடிந்ததே தவிர•. எந்த ஊடகத்தின் விவாதத்திலும் இப்பிரச்சனை க்கு நிர்ந்தர தீர்வுகுறித்து எள்ள‍ளவும் பேசப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

வெள்ள‍த்தின் வேட்டையிலிருந்து சென்னையை காப்பது எப்ப‍டி ? ஏரிகளில் தாழ்வான பகுதிகள் வீட்டு மனைகள் விற்க – வாங்க நிரந்த தடையினை உருவாக்க வேண்டும். மீறி வீட்டு மனைகள் கட்டப்பட்டால் எவருடையது என்றாலும் அதனை விசாரணை இன்றி விருப்புவெறுப்பின்றி உடனடியாக இடித்துத்தள்ள வேண்டும் ஆறு மாதங்களுக்கொரு முறை வெள்ள நீர்செல்லும் வழித்தடங்க ளில் உள்ள‍ இடர்பாடுகளை நீக்கவேண்டும். மழைதொடங்கும்முன் சாலைகள் நல்லமுறையில் தரமாக செப்பனிடப்படவேண்டும். முக்கி யமாக அடுத்த மழை வருவதற்குள்ளாவது உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும்.

மாறிமாறி வரும் ஆட்சிகளால் மாறாத மாரி பிரச்சனைகளுக்கு மாற்று வழிகண்டு நரகாட்சியை நகராட்சியாக்குவோம்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: