Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொடை பகுதியும் 20 முறையும் – ஓர் பார்வை

தொடை பகுதியும் சுமார் 20 முறையும் – ஓர் பார்வை

பொதுவாக ஆண்பெண்களுக்கு குறிப்பாக சில பெண்களுக்கு தொடைப் பகுதி (Thigh)யில்

மட்டும் அதிக சதை போட்டுவிடும். அப்படிப்பட்ட பெண்கள் சில எளிய உடற்பயிற்சி (Exercise)களை வீட்டில் இருந்தபடி செய்து வந்தாலே, அந்த தேவையற்ற சதையை கரைத்து விடலாம்.

அந்த உடற்பயிற்சிகள் :

சேரில் அமர்ந்து கொண்டு கால்களை மடக்கியபடி மேல் நோக்கி தூக்கி இறக்கவும். கால்களை மாற்றி மாற்றி இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும். சுமார் 20 முறை இப்படிச் செய்தால் போதும்.

சேரில் அமர்ந்துகொண்டு கால்களை அப்படியே 20 முறை நேராக மேலே தூக்கி இறக்கவும். முடிந்தவரை இப்படிச் செய்தாலே போதும். கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.

ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு கால்களை 20 முறை மேலே தூக்கி இறக்கவும். இடது பக்கமும், வலது பக்கமும் (Left and Right side) மாறி மாறி படுத்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்.

நேராக நின்றபடி உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக்கொள்ளவும் . கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 20 முறை இப்படி செய்யவும். நின்றபடியே கால்களை மாறிமாறி இடுப்பு வரை தூக்கி இறக்கவும்.

– இந்த எளிய உடற்பயிற்சிகளை தொடைப் பகுதியில் அதிக சதை கொண்டவர்கள் தொடர்ந்து செய்து வந்தால், அந்த பகுதி சதை குறைந்து தொடைப் பகுதியானது ஸ்லிம் ஆகி அழகாகும்.

=> செந்தில்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: