காதலியின் குடும்பத்தையே தீ வைத்து எரித்த காதலன் – காதலி உயிரிழப்பு – காதலன் கைது – அதிர்ச்சிச் சம்பவம்
சென்னை ஆதம்பாக்கம் சரஸ்வதி காலனியில் குடும்பத்துடன் வசித்துவரும்
பட்டதாரி பெண் இந்துஜா, இவரும், ஆகாஷ் என்பவரும் பள்ளி ப்பருவத்தில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள். பட்டப்படிப்பு படி த்து முடித்துள்ள இந்துஜாவை ஆகாஷ் காதலிப்பதாக கூறியு ள்ளார். ஆனால் ஆகாஷ் காதலைஏற்க இந்துஜா மறுத்துவிட்ட தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விரக்தியில் இருந்த ஆகாஷ் நேற்றிரவு இந்துஜா வீட்டிற்குவந்து சண்டைபோட்டுள்ளார். அப்போது இந்து ஜாவின் அம்மா ரேணுகா, தங்கை நிவேதிதாவும் வாக்குவாதம் செய்ததால் சென்றுவிட்டார்.
பிறகுமீண்டும் கையில்பெட்ரோல் கேனுடன்வந்த ஆகாஷ், நின்று கொண்டிருந்த இந்துஜா, அவரது அம்மா, தங்கை தம்பி ஆகியோ ர்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் மூவரின் உட லிலும் தீ பற்றிக் கொண்டு எறிந்தது இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மின் இணைப்பை துண்டித்து, இவர்கள்மீது தண்ணீரை ஊற்றி தீ அணைத்தனர். மூவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே இந்துஜா உயிரிழந்தார். (தொடரும் ஒருதலை காதல் கொலைகள்…வீடியோ)
இந்துஜாவின் அம்மா மற்றும் தங்கை தம்பி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் உள்நோயாளிகளாக அனுமிக்கப்பட்டு தீவிர சிகி ச்சை பெற்று வருகின்ற னர். இந்துஜாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தலைமறைவான ஆகாஷ் என்பவரை காவல்து றையினர் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளன. அரசாங்கமும், சட்டமும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இந்துஜாக்கள் போன்ற இளம் பெண்களின் உயிரிழப்பு நம் சமூகத்திற்கு அவமானம். நம் இளைஞர்கள் மனநிலை வன்மம், குரோதம் போன்ற குணங்களால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. பகிர்வுக்கு நன்றி.