பதற வைக்கும் உண்மை- தூக்கம் இல்லையேல் துக்கம்தான் -Dr. கீதா சுப்ரமணியன்
ஒரு விதத்தில் தூக்கமும் தண்ணீரும் ஒன்று தான் இரண்டும் எப்போ வரும் எப்படி வரும் எங்கே
வரும் இல்லை வரவே வராதா என்ற ஏக்கமும் குழப்பமும் தான் மிஞ்சும் என பெருமூச்சுவிடுபவர் அநேகம் தூங்காதே தம்பி தூங்காதே என்று பட்டுகோட்டை யார் பாட்டிலே வருகிறதே என்று தான் தூங்காததற்கு மனசை தேற்றிக் கொள்பவர்கள் அநேகம் அதே நேரத்தில் தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே என்ற கண்ணதாசன் வரிகள் நம் ஏக்கத்திற்கு நெய் வார்த்து நெஞ்சை
எரியவைக்கு ம் ஆக தூக்கத்திற்கு ஏங்கி இருதலைக்கொள்ளி எறும்பாக த்திரி யும் மனிதர்களுக்குத் தெரியவேண்டிய வேண்டிய பிரம்ம ரகசியம் தூக்கம் என்பது நம் ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு செலவேயி ல்லாத அதே நேரத்தில் மிக ச்சுலபமான வழி என்பது தான் இதை ஒருநண்பர் படித்துவிட்டு இதை இதை.. இதைத்தான் நான் எதிர் பார்த்தேன். தூக்கம் எவ்வளவு அருமையான விஷயம் இது தெரி யாமல் நான் தின ம் ஆபீசில்
தூங்குவதை பெரிய தேச துரோக குற்றம்போல் சித்தரி த்து எனக்கு மெமோ கொடுக்கிறார்களே என்ன செய்ய என்கிறார். இப்படியும் சிலவேடிக்கை மனிதர்கள் சரி விஷயத்திற்கு வருவோ ம் .
சரியாக இரவில் தூங்காவிட்டால் என்ன என்ன பிரச்சினை வரும் என்று ஆராய்ந்த தில் பல செய்திகள் கிடைத்துள்ளன இன்றைய கால கட்டத்தில் பெ ரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும்கூட பல காரணங்களால் தேவையான அள வு தூங்குவதில்லை இன்று குழந்தைக்கு நடக்கத் தெரிந்தாலே போது ம் ஒன்றரை வயதிலேயே அதை குடுகுடு வென்று அதிகாலையிலே யே எழுப்பிவிட்டு அதன் பிஞ்சு பாதங்களையும் அதன் பிஞ்சு இதய த்தையும் ஷூ சாக்ஸ் யூனிபொர்மில் திணித்து பள்ளிக்கு அனுப்பி விடுகிறோம் இந்த செயலின் கடுமையான விளைவுகள் என்ன தெரியு மா
ஒரு குழந்தை நன்கு வளரவும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை எவ்வளவிற்கு எவ்வளவு ஒரு குழ ந்தை 8 முதல் 10 மணி நேரம் இரவில் தூங்குகிறதோ அவ்வள விற்கு அவ்வளவு அதன் உடம்பில் உடல் வளர்ச்சிக்கான growth hormoneஎன்ற நினநீரும்நோய் எதிர்ப்பிற்கான இம்மு நோக்லோபுளின்ஸ் (immunoglobulins) என்ற புரதங்களும் சுரக்கும். இவை இரண்டு ம் சரியாக இருந்தால் டாக்டரிடம் போக வேண்டியே வராது. பிற்காலத்தில் இது போன்ற கொடுமைக்கு
ஆளான குழந்தைகள்தான் மனசோர்வி ற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர். WHY THIS KOLA VERI என்றும் பாடுகி ன்றனர் மன அழுத்தத்தினால் அதிகம் சாப்பிட்டு வெளியில் விளையாடாமல் உட்கார்ந்து டிவி பார்த்து பார்த்து குண்டாகி 30 வயதிக்குலள்ளகவே ரத்தக் கொதிப்பு சர்க்க ரை நோய் மாரடை ப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது முன்பெல்லாம் யாருக்கா வது மேற்குறிப்பிட்ட
நோய்கள் இருந்தால் உங்கள் அப்பா அம்மாவிற்கு இவை உண்டா என் கேட்போம் இக்காலத்தில் அப்பா அம்மாவிற்கு முன்பாகவே அவர்களின் பிள்ளைகளு க்கு நோய் வந்து விடுவதால் இக்காலத்தில் அப்பா அம்மாவி டம் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த வியாதிகள் இருக்கிறதா என கேட்கிறோம் என் இவ்வளவு விளக்கமாக சொல்கின்றேன். என்றால் மிகச்
சின்னச் வயதிலேயே பள்ளிக்கு அனுப்பி குழந்தைகளை சரியாக தூங்கவி டாத பாவம் குடும்பத்தை மட்டுமல்ல ஒரு தேசத்தையே நோயில் விழ வைத்து விடும்
*இன்றைய இந்தியாவில் இளைய சமுதாயம் அதிகம் காந்தி கனவு கண்ட இளைய பாரதம் என்று அதற்காக நாம் மார் தட்டிக் கொள்ள முடியவில்லை
*கிட்டத்தட்ட 1 லட்சத்திக்கும் அதிகமான 40வயதிற்கு கிழே உள்ள ஆண் பெண்களிடம் நமது நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆராய்ச்சி 30 வயதிற்குகிழ் உள்ளவர்களின் இதயத்தின் வயது 37க்கும் மேல் என்று பதற வைக்கும் உண்மையைப் போட்டு உடைக்கிறது
*இதற்கெல்லாம் காரணமே சரியான தூக்கம் சரிவிகித உணவு மற்றும் சீரான உட ற்பயிற்சி இல்லாமல் நடைபிணம்போல் நாம் குழந்தைகளை வள ர்ப்பதுதான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொ ல்லித்தராமல் செல்வம் மட்டுமே முக்கியம் என்று அலையும் பெ ற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கும் தேசத்திற்கும் செய்யும் துரோகம் இது என்றால் மிகையில்லை
சிகாகோவை சேர்ந்த தூக்கவியல் நிபுணர் டாக்டர் லிசா ஷிவேஸ் செய்த ஆராய்ச்சி யின்படி தூக்கம் என்பது நமது உடலிலுள்ள அனைத்து திசுக்களு க்கும் ஒய்வினைக் கொடுத்து அதில் ஏற்பட்ட தேமானங்களை சரி செய்யும் ஒரு workshop போல செய ல்படுவது மட்டுமின்றி தூக்க த்தின்போது உடலிலுள்ள நின நீர் சுரப்பிகள் விழித்தி ருக்கும் போது செயல் படுவதை விட இன்னும் சிறப்பாக செயல் படுவதுடன் நோய்எ திப்பு சக்தியை அதிகரிக்கிறது என்று கூறுகிறார்
ஐந்து முக்கியமான ஆரோக்கிய பிரச்சினைகள் தூக்கமின்மையால் அதி கரிக்கின்றன அதுவே நன்கு 7 மணி நேரம் தூங்கினால் இப்பிரச்சினைக ள் வராமல் தடுக்கலாம் வந்தாலும் அவற்றின் தீவிரத்தைக் குறைக்கலா ம் என்கிறார்
தொற்றுநோய்
நோய்எதிப்பு குறைவதால் எளிதாக]ஜலதோஷம் நுரையீரல் தோற்று நோய் குறி ப்பாக பறவை காய்ச்சல் போன்றவை சட்டேன்று நம்மை பிடிப்பதுடன் அவை எளிதாக குணமாகாமல் போகிறது. இதனால் நம்மிடமிருந்து இவை மற்றவர்க்கு பரவும் காலகட்டமும் அதிகரிக்கிறது.மேலும் நாம் சாப்பிடும் மருந்துகளின் செயல்பாடும் குறைகிறது. இவை மட்டுமின்றி வைரஸ் காய்ச்சல் குடல்நோய் தாக்கமு
ம் ஏற்பட்டு விடுகிறது நோய் தடுப்பிற்கு கொடுக்கப்படும் மருந்துகளும் செய லிழந்து விடுகின்றன.
தூக்கமும் இதய நோய்களும்
முன்னாள் அமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் தான் ஒருமாதம் முழுவதும் சரியாக தூங்காதத்தினால்தான் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதற்காக ஸ்டெ ன்ட்போடும் படியாகிவிட்டதுஎன்றுகூறி இருக்கிறார் அவர் கூற்று சரிதான் சரியாக தூங்காதவர்களுக்கு கரோனரி ரத்த குழாயில் அடை ப்பு ஏற்படுவது மட்டுமின்றி ரத்தத்தின் உறையும் தன்மையை அதிக ரிக்கும் சில புரதசத்துக்கள் உடலில் அதிகம் உற்பத்தி ஆகி விடும் தொடர்ந்து தூக்க ம்கெட்டால் ரத்த கொதிப்பு சர்ககரைநோய் உடற் பருமன் பக்க வாதம் வரும்சாத்திய கூறுகள் மிக அதிகம்
தூக்கமின்மையும் சர்க்கரை நோயும்
சர்க்கரைநோயின் முக்கியமான குறைபாடே உடலில் சுரக்கும் இன்சு லின் சரியாக வேலை செய்யாமல் போவது தான் தூகமில்லாதவர்க ளுக்கு இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் பொய் சர்க்கரை நோய் அபாயம் அதிகரிக்கும்
ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியில் இளவயது ஆண்களை ஒரு வாரம் முழுதும் இரவில் 4 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்க அனும தித்ததில் சர்க்கரைநோயின் ஆரம்பகட்ட அறிகுறிகள் ஏற்பட்டது கண்டு பிடிக்கப் பட்டது 20 முதல் 30 வயதினர் குறைவாக தூங்கி னால் அவர்கள் உடம்பில் 60 வயதிற்கா ன இன்சுலின் குறைபாடு ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது ஆகவே குறைந்த
பட்சம் 7 மணி நேரமாவ து தன்னை மறந்து இரவில் தூங்குவது தான் நல்லது
தூக்கமின்மையும் மூளையின் செயல்பாடும்
நாட்பட்ட தூக்கமின்மை மூளையை சோர்வடையசெய்து ஞாபகசக்தியை குறை த்து விடும் மேலும் கார் ஓட்டும்போது கவனிப்பு திறனை குறைத்து விபத்திற்கு வழி வகுக்கும் ஆராய்ச்சிகளின்படி இவர்களின் மூளை ஒரு குடிகாரரி ன் மூளைபோல் கவனசக்தி இல்லாமல்போய் விடும் குறிப்பாக குழந்தைகளின் மூளை தூகமில்லா விட்டால் சோர்த்து விடுவதா ல் பாடம் சரியாக ஏறாது இதை நாம் புரிந்துகொள்ளாமல் அவர்க ளை திட்டுவதும் மேலும் அவர்களு க்கு மன சோர்வை ஏற்படுத்தி வாழ்வில் வெறு ப்பு ஏற்பட செய்யும் இதை படித்த
பிறகாவது எல்லா வீடுகளிலும் 8 மணிக்கு விளக்கை அனைத்து குழந்தைகளை மட்டுமின்றி பெ ரியவர்களும் நன்றாக தூங்கினால் டாக்டரிடம் போக வேண்டி இருக்காது early to bed early to rise என்று தெரியாமலா நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
தூங்குகின்ற அறையில் டிவி ரேடியோ கம்ப்யூட்டர் லேப்டாப் செல்போன் போன்ற வை இருக்கக்கூடாது தினம் ஒரேநேரத்தில் ஒருகுறிப்பிட்ட இடத்தில் தூங்க பழகி கொண்டால் நித்ராதேவி உடனே வந்து நம்மை தாலாட்டு வாள் தூங்குவதற்கு ஒரு மணி நேர முன்பே சாப்பிட்டால் கெட்ட கனவு கள் வராது. பெரியவர்களுக்கு மாரடைப்பும் வராது
தூக்கமின்மையும் உடற் பருமனும்
சரியாக தூங்காதவர்களுக்கு குறிப்பாக 5மணிநேரத்திற்கும் குறைவாக தூங்குபவ ர்களுக்கு 73% அதிகளவில் உடற்பருமன் ஏற்படுகிறது இது குழ ந்தைகளுக்கும் பொருந்தும் இதற்கு என்ன காரணம் என்று ஆரா ய்ந்ததில் பசியை குறைக்ககூடிய லெப்டின் என்ற ஹோர்மொன் இவர்கள் உடலில் சரியாக சுரக்காதது தான்என்று தெரிந்தது என்று தெரிந்தது .மேலும் இன்சுலின் செயற்பாடும் குறைவதால் இவர்கள் சீக்கிரம் குண்டு பூசணிகளாக மாறி விடு
கிறார்கள் அதே நேர த்தில் நமது உடலானது நாம் சரியாக தூங்க ஆரம்பித்து விட்டால் தன்னை உடனடியாக சரிசெய்து கொள்ளும் திறமை கொண்டுள்ளதால் இன்றே இப்போதே என் துரிதமாக நம் தூக்க அளவை சீர்செய்து வி ட்டால் உடம்பும் உடனடியாக நல்ல ஆரோக்கியத்திற்கு திரும்பி விடும்
தூக்கமின்மை கண்களின் கிழே கருவளையம் ஏற்படுத்தும் நல்ல தூக்கம் நம் தோ ற்றத்தையும் இளமையாக வைக்கும் தோலினை பளபளப்பாக வைக்கும் டென்ஷன் குறைவதால் முகசுருக்கங்கள் வருவதை தடுக்கும் ஆக நல்ல தூக்கம் நம்மை அழகாக ஆரோக்யமாக வைக்கும் நண்பன் என்பது உண்மை தானே குறிப்பாக வீணாக இரவில் கண் விழித்து ஒன்றுக்கும் உதவாத அழு மூஞ்சி சீரியல் பார்த்து நம் உடலையும் மனசையும் கெடு ப்பதைவிட நாம் நேரத்தோடு உண்டு உறங்கி அந்த பழக்கத்தை நம் குழ ந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்தால் வாழ்க்கையில் என்றும் வசந்தம் தான்.
ஆழ்ந்த தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தின் நண்பன் **இதய காவலர் பாரத் கௌரவ் டாக்டர் கீதா சுப்ரமணியன்
=> இதய காவலர் பாரத் கௌரவ் டாக்டர் கீதா சுப்ரமணியன்