Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

1 பெண்ணுக்கு கோபம் வரும் 26 தருணங்கள் – ஆண்களுக்கான அதிரடி அலசல்

பெண்ணுக்கு கோபம் (Angry) வரும் 26 தருணங்கள் – ஆண்களுக்கான அதிரடி அலசல்

காதலித்து திருமணம் செய்து கொள்பவர்கள், பெரியவர்கள் பார்த்து வைத்த‍

துணையை திருமணம் செய்து கொள்பவர்கள், யாராக இருந்தாலும், எந்த திருமணமாக இருந்தாலும் திருமணமாகி குறுகிய காலத்திலேயே அவர்கள் நிற்பது குடும்பநல நீதிமன்றத்தின் வாசலில்… விவாகரத்து கோரி …

இதற்கு என்ன‍ தான் காரணம்… என்று சிந்திக்கும்போது ஒன்று மில்லாத விஷயமாக இருக்க‍லாம். அந்த தீப்பொறியாக கிளம்பிய அந்த விஷயம் பேசி பேசி, திட்டி திட்டி… பதிலுக்கு பதில் என்றே காட்டுத்தீயாக கொழுந்து விட்டு எரிந்து இல்ல‍றம் எனும் பசுமைக்காடு இருந்த தடம் தெரியாமல் அழிந்துவிடுகிறது. இதனால் பாதிப்புக்கு அதிகம் உள்ளாவது இவ ர்களை விட இவர்கள் பெற்ற‍ குழந்தைகள் தான் என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

மனைவி.. தன் கணவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் தருணங்கள் அல்ல‍து செயல்கள் எவை எவை என்பதை கண்டறிந்து அதனை முற்றிலும் செய்யாமல் தவிர்க்க‍ அல்ல‍து கட்டுப்படுத்திக் கொள்ள‌ வேண்டும். அதே போல் கணவனும்.. தன் மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தும் தருணங்கள் அல்ல‍து செயல்கள் எவை எவை என்பதை கண்டறிந்து அதனை முற்றிலும் செய்யாமல் தவிர்க்க‍ அல்ல‍து கட்டுப்படுத்திக் கொள்ள‌ வேண்டும். ஒரு மீறி அந்தந்த தருணங்களில் கணவனோ மனைவியோ கோபப்ட்டாலும், இன்னொருவருவர் ஒரு 10-15 நிமிடங்கள் அமைதியாக இருந்து விட்டால் போதும்.. ஒரு 10-15 நிமிடங்கள் கோபத்தில் கத்தி விட்டு கோபம் தணிந்து சாதாரண மன நிலையில் வந்து உங்களை கொஞ்சுவார்.

க‌ணவனும் மனைவியும் தத்தமது தங்களுக்குள் சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டு க்கொடுக்கும் மனப்பான்மை போன்றவற்றை வளர்த்துக்கொண்டாலே போதும்.

அந்த வகையில் பெண்ணுக்கு கோபம்வரும் 25 தருணங்களை கண்டறிந்து இங்கே விவரித்துள்ளேன் படித்து பயன்பெறுங்கள். இதனைத் தொடர்ந்து ஆணுக்கு கோபம் வரும் தருணங்கள் குறித்த‍ விரிவான விளக்க‍த்தினை விரைவில் பதிவிடுகிறேன்.

பெண்ணுக்கு கோபம் வரும் 26 தருணங்கள்

1) அப்பெண்ணின் கணவன்… வேலைக்கு போகாமல் இருக்கும்போது அல்ல‍து வேலைக்கு சென்றாலும் குடும்ப செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் இருக்கும் போது

2) அப்பெண்ணின் உடல்நிலை சரியில்லாதபோது அவள்மீது சிறிதளவுகூட அக்கறை இல்லாதபோது அல்ல‍து கவனிக்காமல் போகும் போது

3) அப்பெண் விரும்பிய படிப்பை படிக்க, அல்ல‍து விரும்பிய வேலையை செய்ய கணவன் உட்பட‌ பிற உறவுகள் முட்டுக்கட்டை போடும் போது

4) தேவையில்லாத அல்ல‍து அநாவசியக் காரணங்களுக்காக, அப்பெண்ணிடம் அவளது தந்தையிடம் பணத்தையோ அல்லது ஆடம்பர பொருட்களையோ வாங்கி வரச் சொல்லி அவளது தாய்வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பும் போது

5) தனது கணவன் தேவையில்லாமல் அல்ல‍து அநாவசியமாக பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் போது

6) தான் நினைத்தது நடக்காத போது

7)அப்பெண் ஒரு வேலையை செய்துகொண்டிருக்கும்போது அவளது அனுமதியி ல்லாமல், கணவன் உட்பட பிற உறவுகள் மூக்கை நுழைத்து பொருந்தாத கருத்தி னை தெரிவிக்கும் போது அல்ல‍து வேண்டுமென்றே குறைசொல்லும் போது

8) பெண்ணின் சொல்லை தனது கணவன் கேட்காத போது

9) பிறரிடம் குறிப்பாக கணவரிடம் அந்த‌ பெண் சொன்ன வேலையை அந்த கணவன் செய்யாத போது

10) ஆண்கள் குறிப்பாக கணவன் தமக்கு கொடுத்த‍ வாக்குறுதியை நிறைவேற்றாத போது

11) அப்பெண்ணுடன் அவளது கணவன் தாம்பத்தியம் கொள்ளாமல் தவிர்க்கும் போது

12) பெண்ணின் மாதவிலக்கின் போது

13) கருவுற்ற‍ 10 மாதங்களும்

14) குழந்தை பிரசவித்த பிறகும் உடல் மற்றும் மன ரீதியான சில பாதிப்புக்கள் இருக்கும் அந்த சமயத்தில்

15) குழந்தையை பராமரிப்ப‍தில் அல்ல‍து வளர்ப்ப‍தில் தனது கணவன் அக்கறை காட்டாத போது

16) தான் சுமந்து பெற்ற‍ குழந்தையை தனது கணவன் கடுமையாக கண்டிக்கு ம்போது அல்ல‍து அடிக்கும் போது

17) மாதவிலக்கு முற்றிலுமாக‌ நிற்கும் போது

18) கணவனும் மனைவியும் ஜோடியாக வெளியிடங்களுக்கோ அல்ல‍து விழாக்க ளுக்கோ அல்ல‍து பண்டிகை களுக்கோ செல்லும்போது அங்கே அவளது தன்மான த்தை சீண்டிப்பார்க்கும் வகையில் அவளை விட்டுக்கொடுத்து பேசும்போது அல்ல‍து தரக்குறைவாக பேசும் போது

19) அப்பெண்ணின் மனநிலை மற்றும் உடல்நிலையை கருத்தில்கொள்ளாமல் தன்னுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுமாறு கணவன் வற்புறுத்தும் போது

20) காலையில் சென்றவர்கள் வீட்டிற்குச் சொல்லாமல் கொள்ளாமல் வராமல் இருக்கும்போது அல்ல‍து தாமதமாக வரும் போது

21) அப்பெண், பிரியத்துடன் சமைத்த உணவை, அது என்ன‍ உணவு என்றுகூட தெரி யாமல் குறிப்பாக கணவன் அந்த உணவை குறைசொல்லும்போதும், அந்த உணவை தயாரித்த‍ பெண்ணை கிண்டல் செய்யும் போது

22) பெண்கள் புடவை கடையில் தனக்கு விருப்பமான புடவையை தேர்வுசெய்யு ம்போது காத்திருக்க‍ பொறுமையில்லாமல் கணவன் சத்த‍மிடும் போது

23) அப்பெண் தான் அணிந்திருக்கும் நகைகளால் அப்பெண்ணின் அழகு கூடியிருப்ப‍ தாக கணவன் பாராட்டாதபோது அல்ல‍து கவனிக்காத போது

24) வெளியே எங்காவது செல்லும்போது, அப்பெண் புதிதாக உடுத்தியிருக்கும் ஆடை மற்றும் அலங்காரத்தைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட புகழாமல் இருப்ப‍து அல்ல‍து கவனிக்காமல் இருக்கும் போது

25) அப்பெண்ணின் பிறந்த வீட்டாரைப் பற்றி கணவன் உட்பட பிற புகுந்த வீட்டு உறவுகள் தேவையில்லாமல் பேசும்போது அல்ல‍து இழிவாக பேசும் போது

26) தன்னை வைத்துக்கொண்டே அல்ல‍து தான் இருக்கும்போதே கணவன் இன்னொரு பெண்ணின் அழகை புகழும்போது அல்ல‍து வர்ணிக்கும் போது

=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – 9884193081
www.vidhai2virutcham.com
vidhai2virutcham@gmail.com


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: