Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்

ப‌னங்கிழங்கு மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால்

கற்பக விருட்சம் என்ற போற்றப்படும் ஒரே மரம் இந்த பனை மரம் தான். நமது

நாட்டில் அழிந்து கொண்டிருக்கும் மர வகைகளில் இந்த‌ பனைமரம் முதலிடத்தில் உள்ள‍து. இந்த பனை மரத்தில் இருந்து கிடைக்க‍க்கூடிய நுங்கு, பதநீர், கிழங்கு மற்றும் பழம் போன்றவை அதிக சுவையுடன் மனிதர்களுக்கு நல்லாரோக்கியத்தையும், நோய் தீர்க்கும் மாருந்தாக வும் செயல்படக் கூடியது.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு. அதனை வெட்டாமல் மரத்திலேயே விட்டு விட்டால் அந்த நுங்கு நன்றாக பழுத்து பனம்பழமாகி விடும். இந்த பனம்பழத்தினை எடுத்து வெட்டி நிலத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வளர்த்துவந்தால் கிடைப்பதுதான் பனங்கிழங்கு.

ம‌லக் கழிவை வெளியேற்ற‍ இயலாமல் அதாவது மலச்சிக்கலால் அவதியுறுபவர்கள்…. வெயிலில் காய வைத்த‍ பனங்கிழங்கை (ப‌ச்சையாக) எடுத்து, தேவையானளவு தண்ணீர் சேர்த்து அரைத்து ஈரமாவு ஆக அரைத்து அம்மாவில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியுள்ள‍ அல்ல‍து உடலிலிருந்து வெளியேரமறுக்கும் மலத்தை இளகவைத்து, எளிதான மலத்தை வெளியேற்றி அதாவது மலச்சிக்கலை தீர்த்து பூரண சுகத்தை அளிக்கும். மேலும் உடலுக்கு எதிப்புச் சக்தியாகவும் செயல்பட்டு உடலைக் காக்கும் என்கின்றன‌ சித்த மற்றும் இயற்கை வைத்திய முறைகள்.

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ளவும்.

=>சாரதா பாட்டி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: