தேன் சிந்தும் உதட்டில் தேன் தடவி வந்தால்… (If you apply Honey on lips…)
இல்லந்தோறும் இருக்க வேண்டிய மா மருந்து தேன். இந்த தேனில் எழுபது வகை யான
உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. இந்த தேன் மனி தருக்கு ஆரோக்கி யத்தை மட்டுமல்ல அழகையும் இன்னும்சொல்ல ப்போனால் பேரழகை யும் கொடுக்க வல்லது.
பலருக்கு உதட்டில் சுருக்கமும், வெடிப்புகளும் வந்து ஏதோ இளமை யிலேயே முதுமையை எட்டிவிட்டதுபோல் மற்றவர்களுக்கு காண்பி க்கும். இதனால் மனத்தில் தன்னம்பிக்கை குறைந்து, தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆட்பட்டு வேலையில் கவனம் சிதறும் அபாயம் உண்டு.
ஆகவே தேன் சிந்தும் உதட்டில் சிறிது தேனை, 1 விரலில் தொட்டு தொட்டு உதடுகள் முழுக்க தடவவேண்டும். இதுபோலவே தடவி வந்தால் உதட்டில் உண்டா ன சுருக்கம் மற்றும் வெடிப்புகள் அனைத்தும் மறைந்து உதடுகள் ஆரோக்கியமாகவும், அழகாகவும், சிவந்த நிறத்தோடும் பட்டு போல மிருதுவாகி பளபளக்கும் என்கிறார்கள் அழகியல் நிபுண ர்கள். இது பெண்களின் உதட்டில் மட்டுமல்ல ஆண்களும் தங்களது மீசை தாடியில் படாமல் உதட்டில் மட்டும் தடவி வரலாம். .