Friday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணை தயாரிப்பாளர் தற்கொலை – திரையுலகம் அதிர்ச்சி – விஷால் ஆவேசம்

இணை தயாரிப்பாளர் தற்கொலை – திரையுலகம் அதிர்ச்சி – விஷால் ஆவேசம்

கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக நிர்வாகியாகவும், திரைப்பட

இணை தயாரிப்பாளராகவும், பணிபுரிந்து வந்த அசோக்குமார் நேற்று (செவ்வா ய்க்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல பைனான்சியர் ஒருவர்… தான் கொடுத்த‍ கடனை கந்துவட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அசோக்குமார் தற்கொலை திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் பிரபல நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் ஆவார்.


இதுகுறித்து அவரால் பேசமுடியாமல் நாதழுத்த‍ குரலில் தனது வருத்தத்தையும் பகிர்ந்துகொண்டார். அசோக்குமார் தற்கொலை குறித்து நடிகர் சங்கச் செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். இது வரை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது கந்துவட்டி இன்று திரைத்துறையிலும் ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடி யாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்த கந்துவட்டி கும்பலுக்கு முடிவுகட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத்தான் பாடுபட்டுக் கொண்டி ருக்கிறோம். எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்க ளை அணுகவும். 

பொறுத்தது போதும். கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும் கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுகிறேன். இனியாவது திருந்தி தமிழ் சினிமாவில் இருந்து ஓடி விடுங்கள். இல்லா விட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இது நேர்மையாக தொழில் செய்யும் அனைத்து தயாரிப்பாளர்களின் முடிவு. காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல. கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுமக்களோ அல்லது தயாரிப்பாளர்களோ, நேர்மையான அசோக் குமார் போல இன்னொரு அப்பாவி பலியாகாத அளவுக்கு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு விஷால் தெரிவித்திருக்கிறார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

%d bloggers like this: