Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணின் கார்மேகக் கூந்தலுக்குள் ஒளிந்துள்ள‍ சரித்திரம் படைக்கும் விஞ்ஞான ரகசியம் – யாரிடமும் சொல்லாதீங்க ப்ளீஸ்

பெண்ணின் கார்மேகக் கூந்தலுக்குள் ஒளிந்துள்ள‍ சரித்திரம் படைக்கும் விஞ்ஞான ரகசியம் – யாரிடமும் சொல்லாதீங்க ப்ளீஸ்…

ஒருபெண்ணுக்கு என்ன‍தான் முகமும் உடலும் அழகாக, ஆரோக்கியமாக இரு ந்தாலும் அவளது கூந்தல் கார்மேகக்

கூந்தலாக இருந்தால் மட்டுமே அப்பெண்ணுக்கு அழகு முழுமை பெறு ம். அத்தகைய தலைமுடிக்கும் பாலியல் உணர்விற்கும் தொட ர்பிருப்ப தாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய கால த்தில் இருந்தே தலைமுடியானது மனிதர்களின் பாலுணர்வை தூண்டு ம் பொருளாக இருந்துள்ளதாக நிபுண ர்கள் கண்டறிதுள்ளனர்.

கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கி ய அம்சமாக கருதப்படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்ம ச்சாரினிகளும், கிருஸ்தவமத சகோதரிகளும் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக வழித்துவிட்டோ அல்லது முக்காடி ட்டு மறை த்துக்கொண்டோ வாழ்க்கின்றனர்.

கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரி க்கிறது. இதனால் பெரும்பாலோனோரின் கண்கள் அந்த பெண்ணை த்தான் பார்க்கின்றனர். அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கு ம் தொடர்புடையதாக நிபுண ர்கள் கூறியுள்ளனர்.

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம். அது மென்மையை உணர்த்துகிறது. பெண்ணின் தைரியத்தை காட்டுகிறது. அனைவரு க்கும் கவர்ச்சியான அழகை யும் தருகிறது. அதனால்தான் சிறப்பு வாய்ந்த பாலியல் நிபுணரான எல்லீஸ், தனது நூலில் கூந்தலானது பாலுணர்வை தூண்டும் ஒரு அம்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கூந்தலானது கண்களை கவர்கிறது. அதனை தொட தூண்டுகிறது. எத்தனையோ டிசைன்களில் நகைகளை அணிந்தாலும் கூந்தல் இல்லாத பெண்களுக்கு அழகு சற்று குறைச்சலாகத்தான் இருக்கும். கூந்தலானது கவர்ச்சியின் அம்சமாக கருதப்படுவதால்தான் பண்டை ய காலங்களில் கணவனை இழந்த பெண்களின் கூந்தலை வழித்து தலையில் முக்காடிட்டு வந்துள்ளனர். புத்தமதம், ஜைனமதத்தை தழு வியவர்கள் துறவியாக முடிவு செய்த பெண்கள் தங்கள் கூந்தலை முற்றிலும் வழித்துக்கொண்டனர். இதன் மூலம் தங்களின் அழகை பிறருக்கு காட்சிப்பொருளாக்காமல், பிறரை இம்சிக்காமல் இறைவன் சேவையை கருத்தில் கொண்டு வாழ்கின்றனர் துறவிகள்.

கார்மேக கூந்தலைக் கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணி ந்திருந்தாலும் அந்த கூந்தல் அழகே அவளை பேரழகியாக காட்டும் அதனால்தான் கூந்தல் வள ர்ச்சிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொ டுக்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கூந்தலானது காதல் உண ர்வையும், பாலுணர்வையும் அதிகரிக்கும் பொருளாக இருந்துள்ளது. பெண்ணின் கூந்தல் அழகு ஆணின் மூளையில் சமிக்ச்சைகளை தூண்டுகிறது. அதேபோல் ஆணின் தலையில் கூந்தல் இருப்பதுதான் அவர்க ளின் அழகையும் கவர்ச்சியினையும் அதிகரிக்கிறது. அதனால்தான் பெரு ம்பாலான ஆண்கள் கொ ஞ்சம் முடி உதிரத்தொடங்கினாலே அழகு போய்விட்டதே என்று பதற த்தொடங்குகின்றனர். தாம்பத்ய உறவின் போது கூந்தலை கோதுவதன் மூலம் உணர்வுகளை தூண்ட முடியும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நறுமணத்தைலங்களை தடவி கூந்த லை வளர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூந்தலை அழ குபடுத்துவது மனித ர்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்து வதாக அமைந்துள்ளது. அதேபோல் பண்டைய திருமணங்களி ல் ஆணும், பெண்ணும் கூந்தலை முடி போட்டு தங்களின் திருமண பந்தத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

அதேபோல் தம்பதியரிடையே ஆரோக்கியமான தாம்பத்ய உறவு இருக்கும் பட்சத்தி ல் கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த செக்ஸ் ஹார்மோன்களின் சுரப்பு சரியான அளவு இருக்கும் பட்சத்தில் அதிகளவு கூந்தல் வளர்ச்சியடைகிறது. அதேபோல் அதிகளவி ல் கவலை ஏற்பட்டாலோ மன அழுத்தம் இருந்தாலோ கூந்தல் உதிரத்தொடங்குகிறது. நமது மனஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கிய த்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது கூந்தல்.

=> தி. கதிர்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: