Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையின் கன்ன‍த்தில் ஓங்கி அறைந்த இயக்குநர் – நடிகையின் ஆவேசத்தால் மிரண்ட இயக்குநர்

நடிகையின் கன்ன‍த்தில் ஓங்கி அறைந்த இயக்குநர் – நடிகையின் ஆவேசத்தால் மிரண்ட இயக்குநர்

இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் இயக்கத்தில் J.S.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில், உருவாகிவரும் தமிழ்த் திரைப்படம் ‘தொட்ரா’.

இந்த திரைப்படத்தில் ந‌டிகர் பாண்டியராஜின் மகன் பிருத்வி ராஜன் நாயகனாகவும், வீணா என்கிற புதுமுகம் நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் ஜிகர்தண்டா புகழ் பாபி சிம்ஹா நடிக்கி றார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்ச த்திரம் அபூர்வா சஹானா அறிமு கமாகிறார். வில்லனாக தயாரிப்பாளர் ஜெய் சந்தி ராவின் கணவர் எம்.எஸ்.குமார் அறி முகமாகிறார். இந்த படத்திற்கு கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா -2’வுக்கு இசையமைத்த உத்தமராஜா இசையமைக்கிறார்.

படப்பிடிப்பின்போது நாயகி வீணாவை அடித்தது குறித்து இயக்குநரிடம் கேட்ட போது, மலையாள நடிகை வீணாவை நாயகியாக அறிமுகப்படுத்தியு ள்ளோம். அவரை தான் அடித்தது உண்மை தான். ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றை படமா க்கிக் கொண்டு இருந்தோம். ஆனால் அதன் சீரிய ஸ்னெஸ் உணராமல் அவர் சிரித்தபடி ஜாலியாக இருந்ததால் கிட்டத்த ட்ட 30டேக்கிற்குமேல்போனது. அதனால் ஒருகட்டத்தில் கோபம் வந்து அவரை அடித்தும் விட்டேன். மற்றபடி படம் முழுதும் நன்றாக நடித்து ள்ளார் வீணா என்றார். ஆனாலும் அந்த நிகழ்விடத்தில் இருந்தவர்க ளிடம் கேட்ட‍போது நடிகையின் கன்ன‍த்தில் இயக்குநர் அடித்தது ம், நடிகை கோவத்தில் ஆவேசத்துடன் இயக்குநரின் சட்டையைப் பிடித்து உலுக்கிவி ட்டார். இதனால் மிரண்டு போன இயக்குநர் நடிகையின் கைகளை தள்ளிவிட்டார். அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஓடிச்சென்று இருவரையும் சமாதானப்படுத்தியதாக தெரிவித்தனர்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: