நீங்கள் குளிக்கும் நேரத்தை குறைத்தாலே போதும் – ஆழகு தேடிவருமாம் – ஆச்சரிய அலசல்
ஒரு மனிதன் வாழ்நாளில், 1.5 லட்சம் மைல்களை விட அதிகமாக நடப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது. இது 5முறை உலக முழுவதும் சுற்றுவதற்கு சமம். இந்த அளவுக்கு ஆற்றல் புரியும் நமது பாதங்கள் (FEET – FOOT) தான் உடலின் மொத்த பாரத்தையும் தாங்குகிறது. ஆகவே நாம் நம து பாதங்களை காப்பது முக்கியம். பாதங்களில் ஏற்படும் ஒரு பொது வான பிரச்னை வறண்ட பாதங்கள். இதற்கான தீர்வை இப்போது பார்க்கலாம்.
பொதுவாக உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாதபோது சருமம் வற ண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். இதற்கு வெப்பநிலையும் காரணமாக இருக்கலாம். அடிக்கடி சருமத்தை கடினமான சோப்கள் பயன்படுத்தி கழுவி கொண்டே இருப்பதாலும் இது ஏற்படலாம். சோ ரியாசிஸ், மரபுவழிதோல் அழற்சி மற்றும் நீரிழிவு, கல்லீரல் நோய் போன்றவற்றா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வறண்டசருமம் இருக்கலாம். இந்த வறண்ட சருமத்தை போக்கி மிருதுவான பாதங்களை பெற சில வழிகள் உள்ளன.
பாதங்களை பாதுகாக்கவேண்டும்: நம்மை அழகுபடுத்த பலவிதமாக முய ற்சி செய்கிறோம். ஆனால் இந்த அழகுபடுத்தும் முயற்சியில் முகத்துக்கு மற்றும் தலை முடிக்கு கொடுக்கும் கவனத்தை பாதங்களுக்கு கொடுப்பதில்லை. பாதங்களை பாதுகாப்பதில், அதை வறண்டு போகாமல் இருக்க செ ய்வதே ஒரு எளிய மற்றும் முதல் வழி .
குளிக்கும் நேரத்தை குறையுங்கள்: 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் குளிக்க வேண்டாம். உங்கள் பாதங்களை அதற்குமேல் நீரில் ஊற வைக்க வேண்டாம். நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும்போது பாதத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் மறைந்து தோல் வறண்டுவிடும். சூடான நீரில் குளிக்கும் பழக்கும் வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளி ப்பதை வழக்கமாக கொள்வோம். சூடானநீர், சருமத்தில்உள்ள அதிக மான எண்ணெயை உரித்து எடுத்துவிடும். மேலும் சருமம் கடினமாக மாறும்.
ஈரப்பதத்தை செலுத்துங்கள்: பாதங்களை கழுவியவுடன், காய வை த்து, சிறிதளவு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இதனால் கால் பாதங்களு க்கு ஈரப்பதம்கிடைக்கிறது. விரல்களுக்குஇடையில் இதை தடவவேண்டாம். இவை பாக்டீரியாக்கள் நுழைய வழிவகுக்கும். பாதங்கள் வறண்டு காணப்ப டும்போது அல்லது பாதங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும்போது வெடிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க குளிக்கும்போது படிக கல்லை கொண்டு பாதங்களை உரசலாம்.
இதனால் பாதங்களில் படிந்துள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். குளித்த பிறகு பாதங்களுக்கு மாய்ஸ்சரைசர் தடவ வேண்டும். மழை மற்றும் குளிர் காலங்களில் பாதங்கள் மேலும் வறண்டு காணப்படும்.
இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அடிக்கடி மாய்ஸ்சரைசர் தடவலாம். வறட்சி யால் பாதத்தில் அரிப்பு ஏற்படலாம். இதை சொரிவதால் தோலில் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு, நோய் தொ ற்றுக்கு வழி வகுக்கும். எண்ணெய் அல்லது கிரீம்களை தடவி கொண்டே இருப்பது அரிப்பை கட்டுப்படுத்தும்.
சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் தன்மை இருக்கும். இது சருமத்திற்கு மென்மையைதரும். சருமம் நீர்ச்சத்தை இழக்காம ல் இருப்பதற்கு, சிபம் என்ற ஒரு எண்ணெய் பொருளை உடல் உற்பத்திசெய்யும். இது ஒரு பாதுகாப்பு பகுதி போல் செயல்படும்.
ஆனால் நாம் பயன்படுத்தும் கடினமான சோப்கள் மற்றும் குளிர் கால த்தில் நம் மீது படும் காற்று போன்றவற்றால் இந்த பாதுகாப்பு பகுதி பல மிழந்து சருமம் நீர்ச்சத்தை இழக்கிறது. இதனால் சருமம் எரிச்சலடைகி றது. ஆகவே சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது அவசியம்.
=> தொகுப்பு செந்தில்