Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டுக் கடன் – குறைந்த வட்டி விகிதத்தை எவ்வாறு பெறுவது?

வீட்டுக் கடன் – குறைந்த வட்டி விகிதத்தை எவ்வாறு பெறுவது?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் மிகப் பெரிய கனவு என்பது தங்களுக்குச்

சொந்தமாக ஒரு வீடு மட்டுமே. அந்தக் கனவை நனவாக்க அவர்களு க்கு உதவுவது வீட்டுக் கடன்கள் மட்டுமே. அதிக வீட்டுக் கடன் வட்டி என்பது சொந்த வீடு கிடைத்த மகிழ்ச்சியை மரத்துப் போகச் செய்து விடும்.

வீட்டுக் கடன்களைப் பொருத்தவரை, கடன் தொகை மிகவும் அதிகம். எனவே வட்டி யில் சிறிது அளவு குறைந்தாலும் சேமிப்பு அதிகமாகிவிடும். வீடு கட்டுவதைவிட மிகக் குறைந்த வட்டிவிகிதத்தில் வீட்டுக்கடன் பெறுவது மிகவு ம் அவசியமாகும். எனவே, மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் எவ்வாறு பெறுவது?

வட்டி விகிதம்

வீட்டுக் கடனைத் தேர்ந்தெடுக்கும்போது வட்டி விகிதம் மட்டுமே மிக முக்கியக் கார ணியாகக் கருதப்படுகின்றது. அது மிக அதிகமாக இருந்தா ல், உங்களுடைய நிதி ஆதாரம் முற்றிலும் கட்டுப்பாடற்ற தாகிவிடும். உங்களுக்கு உதவித்தேவைப்படுகின்றபடியால் , நாங்கள் உங்களுடைய நிதிச் சுமையை நீண்டகாலத்திற்கு அதிகரிக்க விரும்பவில்லை. எனவே, ஒரு வீட்டுக்கடன்பெ றும் பொழுது குறைந்த வட்டி விகி தத்தை எவ்வாறு பெறுவ து என்பதில் உங்களுடைய ஆற்றல் மற்றும் கவனத்தைச் செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.

உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் உங்கள் வீட்டுக் கடனின் மீதான வட்டி பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பொழுது நீங்கள் இதுவரை சேர்த்து வைத்தை நன்மதிப்பு என்கிற உங்களுடைய நல்ல கிரெடிட் கோரை பயன்படுத்துங்கள். உங்களுடைய கடன் வரலாறு எந்த அளவிற்கு உறுதியாக உள்ளதோ அந்த அளவி ற்கு மிகக்குறைந்த வட்டியில் உங்களுக்கு வீட்டுக்கடன் கிடை க்கும். ஒரு வேளை உங்களுடைய கிரெடிட் கோர் நன்றாக இல்லையெனில், உங்களுடைய நிலுவை கடன்களை அடைத்து, கிரெடிட் கோரை மேம்படுத்திய பன்னர் வீட்டுக் கடனிற்கு விண்ணப்பிக்கவும். உங்களுடைய கடன் அட்டையில் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது போன்ற சிறுசிறு செயல்கள் கூட உங்களுடைய க்ரெடிட் கோரை மேம்படுத்த உதவும்.

குறுகிய கால வீட்டுக் கடன்களைத் தேர்வுசெய்யவும்

இது உங்களுக்கு எதிர்மறையானதாகத் தோன்றலாம், ஆனால் நாங்கள் கூறுவதை முழுமையாகக் கேளுங்கள். நீங்கள் நீண்ட கால வீட்டுக்கடன்களைத் தேர்ந்தெடுக்கும் பொழுது உங்களுடை ய கடனிற்கான இ எம் ஐ மிகவும் குறைவாக இருக்கும் என்பது உண்மைதான். எனினும், நீங்கள் கடனிற்குச் செலுத்திய மொத்த வட்டி அதிகமாக இ ருக்கும் என்பதும் உண்மைதானே. உங்களுடைய நிதி நிலைமை நன்றாக இருந்தா ல், நீங்கள் குறைந்த கால வீட்டுக்கடன்களைத் தேர்வுசெய்வது கண்டிப்பாக உங்க ளுக்கு நன்மையே தரும்.

பருவகாலச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

அவசரப்பட்டு வீட்டுக்கடன் வாங்குவதற்குப் பதில் சிலவாரங்கள் பொறுத்திருந்தால் உங்களுக்கு நன்மையே கிடைக்கும். இக்காத்திருக்கும் கால த்தில், சந்தையில் உள்ள அனைத்து விதமான வீட்டுக் கடன்களையும் அலசி ஆராய்ந்து, உங்களுக்கு உகந்ததைத் தேர்ந்தெடுக்கலாம். அதோடு இக் காத்திருக்கும் காலத்தில், மிகவும் முக்கியமாகப் பல்வேறு பருவ காலச் சலுகைகளையும் பெறலாம்.

சலுகைகள்

பல்வேறு நிதி நிறுவனங்கள் பண்டிகை காலங்களில் அல்லது வரம்புக்குட்பட்ட காலகட்டங்களில் வீட்டுக்கடன்மீதான சலுகைகள் அல்லது தள்ளு படிகளை வழங்குகின்றன. உங்களுடைய வீட்டுக் கடனிற்கான விண்ணப்பத்தைச் சரியான நேரத்தில் சமர்ப்பித்தால், உங்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும். என வே, உங்களுடைய கடன் தேவைகள் சற்று நெகிழ்வுடையதாக இருந்தால், இந்தத் தந்திரோபாயத்தைக் கருத்தில் கொள்வது அவசியம்.

உங்களுடைய கடன் வருமான விகிதத்தைக் குறைக்கவும்

இந்தத் தலைப்பு குறிப்பிடுவதுபோல், உங்களுடைய கடன் வருமான விகிதம் என்ப து உங்களுடைய வருமானத்திற்கு எதிரான உங்களுடைய அனைத்து விதமான கடன்களின் அளவீடு ஆகும். நீங்கள் உங்களுடைய கிரெடிட் கோரை பராமரிப்பது போன்று, இந்த விகிதத்தையும் பராமரிப்பது மிகவும் முக்கியம். கட்டை விரல் விதி தெரிவிப்பதைப் போல், உங்களுடைய கடன் அளவு உங்களுடைய வரு மானத்தை விட மிகக் குறைவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்குக் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் பெற்றுத் தரும். உங்களுடைய கடன் கூறு சற்று உயர்ந்ததாக இருந்தால், அதை எவ்வளவு முடியு மோ அவ்வளவு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தக் கடனாக இருந்தாலும் கடனை குறைக்கலாம்

இது ஒரு கல்வி கடன் அல்லது ஒருகார கடன் என்று ஏதுவா க வேண்டுமானாலும் இருக்கலாம். அவ்வாறு இருப்பின் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தைச் செழுத்தி உங்களுடைய கடன் கூறுகளைக் குறைக்க முயற்சி செய்திடுங்கள். உங்களுடைய கடன் வருமான விகிதம் குறைந்த அளவில் இருந்தால், நீங்கள் உங்களுக்கு வீட்டுக்கடன் வழங்கும் நிதி… நிதிநிறுவ னத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்பெறலாம். இது மிகவும் எளிதாக வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்த உங்களுக்கு உதவும்.

பேச்சுவார்த்தைக்குப் பயப்பட வேண்டாம்

உங்களிடம் நிரந்தரமான வேலை இருந்தால், உங்களுடைய நிதி வரலாறு திடமாக இருந்தால், உங்களுக்குக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தத் தயங்காதீர்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய மாதா ந்திர இ எம் ஐ-களி ல் சில பல ஆயிரங்களை மிச்சப்படுத்த உங்களுக்கு உதவும். உங்களுக்கு உங்களு டைய வீட்டுக் கடன் தகுதி மீதான நம்பிக்கை இருக்கும் வரை இதைச் செய்யத் தயங்காதீர்கள். ஏனெனில் இதைச் செய்யும் பொழுது உங்களிடம் இழப்பதற்கு ஏதும் இல்லை. எனினும் ஆதாயம் அதிகம்.

சாத்தியம்

நீங்கள் இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த 5 தந்திரங்களைக் கையாண்டு உங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொள்ளலாம். இது இப்பொழுது சாத்தி யமே. மேலும் இவ்வாறு செய்யும் பொழுது உங்களுடைய வீட்டுக் கடனானது இனி மையானதாக மாறி விடுகின்றது. உங்களுக்கு அதிக விருப்பமு ள்ள வீட்டுக் கடன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன் பஜாஜ் பின்ஸ்வேர் வீட்டுக் கடன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். இது நெகிழ்வுத்தன்மையுடன் நம்பமுடியாத மலிவு விலையில் வருகின்றது. 2017 நவம்பர் 23 ஆம் தேதி முதல் 2017 நவம்பர் 29 வரை, உங்கள் வீட்டுக் கடனின் மதிப்பு ரூ 30 லட்சத்திற்கு மேலாக இருந்தால், வெறும் 8.3% வட்டி விகிதத்தில் உங்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும்.

=> செந்தில்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: