Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முடி இல்லா மேனி அழகுக்கு… – இக்கால இளம்பெண்கள் இதை கடைபிடிப்பார்களா?

முடி இல்லா மேனி அழகுக்கு… – இக்கால இளம்பெண்கள் இதை கடைபிடிப்பார்களா?

ஆண்கள் உடலில் ரோமங்கள் அதாவது மீசை, தாடி, கைமுடி கால்முடி, மார்பில்

முடி, முதுகில் முடி இப்ப‍டி எல்லா இடங்களிலும் முடி இருப்ப‍து தனி அழகுதான். ஆனால் பெண்கள் இதில் நேர்மார். ஆம் பெண்களுக்கு அழகே முடியில்லாமல் மழுமழுவென மின்னும் தேகம்தான். ஆனா ல் ஒருசில பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கு ம் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கு ம். இந்த முடிகளை நீக்க பெண்கள் பல்வேறு வழிகளை கடைபிடி த்து வந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு உள்ளது. அது என்னவென்று பார்ப்போமா!

1. சாதாரணமாக சவரம் செய்து மழித்தல். ஒருவேளை மீண்டும் முளைத்தால் மீண்டும் சவரம்தான். வேறு வழியில்லை

2. இரசாயன பொருட்களை உபயோகித்து முடிகளை பிளீச்சிங் செ ய்வது. இதன் மூலம் முடிகளை மிக மெல்லிய நிறமாக்கி வெளியே தெரியாமல் செய்யலாம்

3. எலக்ட்ரோலைசிஸ் (Electrolysis) என்ற முறைப்படி முடிகளை வேரோடு பிடுங்குதல். இதனால் மீண்டும் முடி முளைக்காது. இந்த சிகிச்சை கொஞ்சம் காஸ்ட்லி மற்றும் நேரம் அதிகம் ஆகும்

4. லேசரை பயன்படுத்தியும் முடிகளை தனித்தனியா எடுத்து மீண்டும் முளைக்காம ல் செய்யலாம். முந்தைய முறை போலவே இந்த முறைக்கும் நேரமும் பணமும் அதிகம் ஆகும்

ஆனால் மேற்கண்ட நான்கு வகை சிகிச்சைகள்… நிரந்தர தீர்வை தருகின்றதோ இல்லையோ அதிக பணத்தை செலவழித்து பக்கவிளைவுகளை விலைக்கு வாங்குகிறீர்கள் என்றே அர்த்த‍ம்.

எனவே இந்த பிரச்சனை வராமல் இருக்க சிறு வயதில் இருந்தே பெண்கள் முகம் உள்பட உடல் முழுவதும் மஞ்சள் பூசி வந்தால் இந்த பிரச்சனையே வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கால இளம்பெண்கள் இதை கடைபிடிப்பார்களா?

=> மைதிலி ராஜ‌ராஜன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply