Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உஷாரய்யா உஷார் – ஹோட்டலில் சாப்பிடும்போது அதீத கவனத்தில் கொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள்

 

உஷாரய்யா உஷார் – ஹோட்டலில் சாப்பிடும்போது அதீத கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்

நாம் ஆரோக்கியமாக நிறைந்த ஆயுளோடு வாழ்வதற்காக… தரமான மூலப்பொரு ட்களையும்,

காய்கனிகளையும் தேடிப்பிடித்து வாங்கி வந்து மிகுந்த கவன த்தோடு உணவு சமைத்து நம் முன்னே வைத்தாலும், நம்மில் சிலர்… அதனை வேண்டா வெறுப்பாக எடுத்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு என்ன‍ இது உப்பு இல்ல காரமும் இல்ல• ச்சீ இது வேண்டாமென்று சொல்லிவிட்டு அவர்களையும் நீங்க ளும் உங்க சமையலும் என்று எடுத்தெறிந்து பேசிவிட்டு ஹோட்டலுக்கு போய் நன்றாக சாப்பிட கிளம்பி போவார்கள்.

அந்த ஹோட்டல் சாப்பாடு ஆரோக்கியமானது தானா? இல்லை என்று நம் அனைவருக்கும் தெரியும்! ஆனாலும் விரும்பி சாப்பிடு வார்கள்! அடிப்படையாக சில விஷயங்களை நீங்கள் ஹோட்டலில் கவனித்தால், ஹோட்டலில் சாப்பிடும் போது மாற்றிக் கொண்டால், ஆரோக்கிய சுகாதார நிலை பெரிதாக மோசமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும்…

# எண்ணெய் உணவுகள்!

ஹோட்டலுக்கு செல்வது என்றால் நமக்கு அலாதி பிரியம் வந்து விடும். அதே நேரத்தில் உண்ணும் உணவில் அதிக கவனம் எடுத்து க்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் முக்கியமாக எண்ணெ ய் உணவு ஆர்டர் செய்யும் போது.

பெரும்பாலும் ஹோட்டல்களில் உபயோகப்படுத்திய எண்ணெ ய்களை தான் மீண்டும், மீண்டும் வடிக்கட்டி பயன்படுத்துவர். இது உடல் நலத்திற்கு கேடானது.

எனவே, ஹோட்டலில் சாப்பிடும் போது கிரில் அல்லது தந்தூரி, வேக வைத்த உணவுகள் தேர்வு செய்து உண்பது கொஞ்சம் ஆரோ க்கியமானதாக இருக்கும்.

# தட்டு, டம்ளர்!

சாப்பிட வைக்கப்படும் தட்டை நீங்களே கொஞ்சம் தண்ணீர் தெளித்து, டிஷு பேப்பர் வைத்து துடைத்த பிறகு சாப்பிட பயன்படுத்துங்கள். சில உணவகங்கள் மட்டுமே பீங்கான் தட்டுகளை சுடு தண்ணியில் இட்டு கழுவி, துடைத்து பயன்படுத்துவார்கள்.

பல உணவகங்கள் வெறும் நீரில் அலாசி தான் மீண்டும் பயன்படுத்து வார்கள். இதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

# டிஷு பேப்பர்!

பெரும்பாலும் இப்போது பல கடைகளில் டிஷு பேப்பர்கள் உபயோகத்தி ற்கு வந்து விட்டன. ஆயினும், இன்னும் சில கடைகளில் கை கழுவும் இடத்தில் டவல்கள் தான் தொங்கவிட்டிருப்பார்கள், பலர் பயன்படுத்திய அந்த டவலில் இருந்து பாக்டீரியா க்கள் தான் அண்டுமே தவிர, கைகள் சுத்தம் ஆகாது. இதை தவிர்க்க வேண்டும்.

# மூலப் பொருட்கள்!

நாம் ஹோட்டல் செல்லும் போது உணவு ஆர்டர் செய்வதோடு நிறு த்திக் கொள்வோம், அவர்கள் எப்படி சமைக்கிறார்கள், என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என கேட்டறிந்துக் கொள்ள வே ண்டியது அவசியம். பெரும்பாலான பெரிய ஹோ ட்டல்களில் கேட்டா ல் நிச்சயம் பதில் அளிப்பார்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

# ஜூஸ்!

ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு கடைசியாக ஜூஸ் எதாவது குடிக்க நமது மனம் அலைபாயும். இதில் தவறில்லை. ஆனால், எக்காரணம் கொண்டும் கார்பனேட்டட் பானங்கள் பருக வேண்டு ம். இது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். பழரசம் குடிப்பது சிறந்தது.

# மீன்!

மீன் பிரியர்களே, முடிந்த வரை மீன் உணவுகளை வெளியே ஹோட்டல்களில் சாப்பிட வேண்டாம். முக்கியமாக பொறித்த, வறுத்த மீன்கள். குழம்பு மீன்களில் கூட பெரிதாக எந்த தாக்கமும் இருக்காது. ஆனால், மீண்டும், மீண்டும் பயன்படுத்த ப்படும் எண்ணெயில் பொறிக்கப்படும் மீன்கள் ஆரோக்கியத்தை பதம்பார்க்கும்.

# மைதா!

ஹோட்டலில் உணவு உண்ணும்போது மைதா உணவு கள் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக இரவு நேரங்களி ல், மைதா எளிதாக செரிமானம் ஆகாது. அவை செரி க்க நீங்கள் அதிக உடல் வேலை செய்யவேண்டும்.

எனவே, இரவு மைதா உணவுகள் சாப்பிட்டால், உடல் எடை உடனே கூட நிறைய வாய்ப்புகள் உண்டு.

=> தான் படித்த பதிவை அனுப்பியவர் மைதிலி ராஜன்

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: