தண்ணீர் கலக்காத பால்-ஐ சுண்டக் காய்ச்சி குடித்து வந்தால்… (Drink Hot Milk without adding Water)
பாலில் உள்ள சத்துக்கள்…….
பிறந்த குழந்தைகளின் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் எதிர்ப்புச்
சக்தியையும் அளிக்க கூடிய தாய்ப் பால் எவ்வளவு நல்லதோ அதேபோல் நமக்கு பசுப்பால் நல்லது. ஆம் தண்ணீர் கலக்காத பசுப்பாலை நன்றாக சுண்டக்காய்ச்சி தினமும் ஒரு குவளை குடித்து வந்தால் அதன் பலன் நமக்கு கைமேல் கிடைக்கும் எனகிறது இயற்கை மருத்துவ முறை.
முதலில் பாலில் உள்ள சத்துக்களை பார்ப்போம்.
பாலில்
நல்ல தரமான புரதம்,
கொழுப்பு,
சிறிய அளவில் மாவுச்சத்து,
மக்னீசியம்
போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.
மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ளலாம். 6%,3%,1.5% கொழுப்பு உள்ள பால் கிடைப்ப தால் நமக்குத் தேவையான கொழுப்பு அளவின்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பாலில் தண்ணீர் சேர்க்க கூடாது. பாலில் 70% தண்ணீர் இருப்பதால் பாலில் தண்ணீர் கண்டிப்பாக சேர்க்க வேண்டாம். கொழுப்பு குறைக்க வேண்டும் என்றால், கொழுப்பு குறைவாக உள்ள பாலை பயன்படுத்த வேண்டுமே தவிர தண்ணீர் ஊற்றிக்
காய்ச்சக் கூடாது.
இச்சத்து எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான சுண்ணாம்பு சத்து பாலில் அதிகளவில் உள்ளது. எலும்பு வளர்ச்சி குழந்தை மற்றும் இளம் பருவத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. மாத விடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டி ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். பற்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பால் மிகமிக முக்கியமானது. இவை தவிர இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயி ற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பால் எடுத்து க்கொள்ளலாம்.
மருத்துவரை கலந்து ஆலோசித்து அதன்பிறகு குடித்து வரவும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!