Tuesday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்து வேத சாத்திரங்கள் கூறும் இல்லறம் & பிரம்மச்சர்யம் தர்ம இயல்புகளும் 5 மகாயக்ஞங்களும்

இந்து வேத சாத்திரங்கள் கூறும் இல்லறம் பிரம்மச்சர்யம் தர்ம இயல்புகளும் 5  வகையான மகாயக்ஞங்களும்

இந்து மதத்தில் உள்ள‍ சுதந்திரம்போல் வேறெந்த மதங்களிலும் கிடையாது. இந்த மதத்தில்

உள்ள‍ இல்லறம் மற்றும் பிரம்மசர்யம் தரும இயல்புகள் குறித்து இங்கு காணவிருக்கிறோம். படித்து பயன்பெற வேண்டுகிறோம்.

பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம தர்ம இயல்புகள்

பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருவிடம் குற்றம் குறை கள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வ வடிவானவர். குருவின் மனம் விரும்பும்படி பணி விடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடு படாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுலக் கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.

இல்லற தர்ம இயல்புகள்

இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமா க நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

1. தேவ யக்ஞம்:-

வேள்விகள் வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது.

2. ரிஷி யக்ஞம்:-

உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை,இதிகாசங்கள், திருமுறை, திருக்குற ள் போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைக ளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.

3. பித்ரு யக்ஞம்:-

நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.

4. மனுஸ்ய யக்ஞம்:-

வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.

5. பூத யக்ஞம்:-

பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.

இல்லற தர்மத்தில் இருந்தாலும், பக்தி யோகத்தில் செய்ய வேண்டும். படைக்கப்ப ட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் – எனது ” (அகங்காரம் – மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழவேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வனப் பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனப் பிரஸ்த (காடுறை வாழ்வு) தர்மம்

வானப்பிரஸ்த ஆசிரமவாசிகளின் முதன்மையான கடமைகள் தர்மம், தவம், இறை பக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குக ள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்யம் போன்ற விரத ங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர்லோகத்தை அடைந்து பின்னர் இறைவனை அடைவான்

சந்நியாச தர்மம் (துறவறம்)

கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்களு ம் கூட துயரத்தை தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள்,உடமைகள், உறவி னர்கள் மற்றும் வைதீக கர்மங்களை துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவனம்) அணிந்து கொண்டு, கமண்டலம், தண்டம் கையில் வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேசவேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுள்ள செயல்களை செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம்: இந்த மூன்று தண்டங்களை (த்ரி தண்டி ) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசி யாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உண வை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதே போல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைய மாட்டான்.

துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவ ராசிகளையும் சமமாக பார்த்து, பூலகில் தொடர்ந்து ஒரிடத்தில் தங்காமல், நிலை யின்றி தனியாக திரிந்து வாழவேண்டும்.

மோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞான நிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரமம் நியமங்களுக்கு (விதிகள்) கட்டு ப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம்.

துறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானா லும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள்

கற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினா லும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.

ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை எனும் இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம் போன்ற உணர்வுகள் காண முடியாது.

எந்த துறவியிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்ட த்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சை ஆகும்.

சந்நியாசி தன்னுடைய தர்மங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விஞ்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான்.

18வது அத்தியாயம்: வானப்பிரஸ்த, சந்நியாச தர்மத்தை விளக்குதல்

வனப் பிரஸ்த தர்மம்

உத்தவரே, இல்லற ஆசிரமத்தில் மனநிறைவு அடைந்தவன், தன் மனைவியுடன் அல்லது தனியாக, மூன்றாம் ஆசிரமமான வனப் பிரஸ்த ஆசிரமத்தை கடை பிடிக்க, காட்டிற்கு செல்லாம். காட்டில் கிடைக்கும் கிழங்கு-காய்கனிகள் உண்டு, மரவுரி, இலைகள், மான்தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, முடி, நகம், மீசை, தாடிகளை மழித்துக் கொள்ளாது, தவ வாழ்வு வாழவேண்டும்.

கோடைகாலாத்தில், நாற்புரம் தீ மூட்டி, கண்களால் சூரியனை பார்த்துக் கொண்டு ம், மழைக்காலத்தில், மழையில் நின்று கொண்டும், குளிர்காலத்தில், நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்து உடல் சுண்டிப்போன வன், முனிவர்கள் அடையும் மகர்லோகத்தை அடைந்து பின் இறைவனை அடைவா ன்.

கர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பி னும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உண ர்ந்து நிறைவான வைராக்கியம் பெற்று, சந்நியாச ஆசிரமத்தை ஏற்க வேண்டும்.

சந்நியாச தர்மம்

சந்நியாசி கோவனத்தை ஆடையாக கொண்டு, கையில் கமண்டலம் மற்றும் தண்டு ஏந்தி அல்லது ஏந்தாமலும் இருக்கலாம். மௌனம் வாக்கின் தண்டம், பலனில் கர்மாக்களை விடுவது, உடலின் தண்ட்ம், பிராணாயாமம் செய்வது, மனதின் தண்ட ம், இந்த மூன்று தண்டங்களையும் சுமக்காதவன், வெறும் மூங்கில் தடியை சுமப்ப தால் மட்டும் சந்நியாசியாக மாட்டான்.

துறவி தனக்கு கிடைக்கும் பிட்சையில் மனநிறைவுடன் உண்டு வாழ வேண்டும். எதனிடத்திலும் பற்று கொள்ளாமலும், புலன்களை அடக்கியவனாகவும், ஆத்மாவி லேயே மகிச்சியடைந்து, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மன நிறைவு உடையவனாக இருந்து) அனைத்து சீவராசிகளிடம் சமமாக பார்த்து தனி யொருவனாக உலகை வலம் வரவேண்டும். பிட்சைக்காக, துறவி நகரம், கிராமங்க ளுக்கு செல்லலாம். எவ்விடத்தையும் தனது இடம் என்று பற்று வைக்கக் கூடாது.

ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற சந்நியாசி (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்த வன், மோட்சத்தில் விருப்பம் உள்ளவன், வேறு எதிலும் பற்று இல்லாதவன், ஆசிரம நியமங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட விதி முறைகளைக் கடந்து சுதந்திரமாக உலகை வலம் வருவான். வேதத்தில் கூறப்பட்ட கர்ம காண்ட விளக்கத்தில் ஈடுபடமாட்டான்.

வைராக்கியம் அடைந்தவர்கள்

உத்தவரே இனி வைராக்கியம் அடைந்தவர்களைப் பற்றி கூறப்போகிறேன். மகி ழ்ச்சியைத் தரும் பொறிநுகர் பொருட்கள், இறுதியில், துன்பத்திற்குகே காரணம் என்பதை உறுதியாக உணர்ந்து பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வைராகி, பிரம்மநிஷ்டராக, குருவை அடைந்து, குருவிடம் பக்தி மற்றும் நம்பிக்கை வைத்து, தனக்கு பிரம்ம ஞானம் அடையும் வரை, குருவை இறைவனாக உணர்ந்து பணி விடைகள் செய்ய வேண்டும்.

எவன் ஒருவன் காமம் முதலான ஆறு எதிரிகளை அடக்காமலும், புலன்கள் எனும் குதிரைகளை புத்தி என்ற சாரதியால் அடக்கப்படாமலும் உள்ளானோ, எவனிடம் ஞானமும், வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயி ற்றை நிரப்பிக் கொள்பவனாகவும், தன்னுள் இருக்கும் பரமாத்மாவாகிய என்னையு ம் (இறைவனை) ஏமாற்றுகிறான். அவனுடைய உடை மட்டும் காவி; அந்த போலி த்துறவிக்கு மனத்தூய்மை இல்லாததால் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் நன்மை இல்லை.

துறவியின் முதன்மையான தர்மம், அமைதியும் – அகிம்சையும்; வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம், தவம் – இறை பக்தியும்; இல்லறாத்தானின் முதன்மையான தர்மம், அனைத்து சீவராசிகளைக் காத்தலும் – அக்னி ஹோத்திரமுமே; மாணவனி ன் முதன்மை தர்மம், குருவுக்கு பணிவிடை செய்வதே.

இவ்விதம் தங்களுக்குரிய ஆசிரமங்களை கடைப்பிடிப்பவர்களின் உள்மனம் தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று விரைவில் இறைவனை அடைகிறார்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: