1 டீஸ்பூன் வறுத்த எள்ளை (Fried Sesame) தினமும் சாப்பிட்டு வந்தால்…
எள் வகைகளில் கறுப்பு எள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவதில் சிறந்தது. ஆனால்
வெள்ளை எள் மத்தியமான குணத்தை உடையது. மேலும் இந்த எள் விரைவில் செரிப்பதில்லை. அதனால் அதை அளவுடன் பய ன்படுத்துவதே சிறந்தது.
இது சுவையில் லேசான கசப்புடன் கூடிய துவர்ப்புச் சுவை உடையது. ஆனால் ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தனித்தன்மை கொண்டது. சிலரது உடலில் கால்சியம் தட்டுப்பாடு ஏற்பட்டு எலும்புகள் பல வீனமடைந்தும் மற்றும் இன்னபிற நோய்களாலும் பாதிகப்ப ட்ட்டிருப்பர்.
இவர்கள்… எரியும் அடுப்பில் வாணலி வைத்து சூடேறியவுடன் அந்த வெற்று வாணலியில் எள்ளை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். அந்த வறுத்த எள்ளை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் போதுமானது… அவர்களுக்கு தேவையான கால்சியம் முழு அளவில் கிடைத்து எலும்புகளும் பலம்பெறும் என்கின்றன சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.