Saturday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் விஷால்… R.K. நகர் இடைத்தேர்தலில் போட்டி ஏன்? – தகிக்கும் பின்னணித் தகவல்

நடிகர் விஷால்… ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி ஏன்? – தகிக்கும் பின்னணித் தகவல்

நடிகர் விஷால்… முதலில் நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி

இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது தந்தை பிரபல‌ தயாரிப்பாளர் G.K. ரெட்டி, ஆவார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே திரைப்படத்தில் அறிமுகமாகி பின் சண்டக்கோழி, திமிரு என தொடர்ச்சியாக இன்றைய இரும்புத்திரை திரைப்படம் வரை ஒரு சிலது தவிர‌ வெற்றித் திரைப்படங்களை தந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

திடீரென்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் (In R.K. Nagar By-election)  தான் போட்டி யிடுவதாக இன்று (02.12.2017) மாலை அறிவித்தார். இவர் ஏன் ஆர்.கே. நகரில் போட்டியிடுவது ஏன் என்று விசாரித்தபோது… கீழ்காணும் தகவல்கள் கிடைத்தன•

நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த சரத்குமாருடன் ஏற்பட்ட‍ கருத்து மோதலாலும், தொடர்ச்சியாக சரத்குமார் அணியினர் இவரை தொட ர்ச்சியாக சீண்டியதாலும், இவரே நடிகர் சங்கத்தில் நால்வர் அணி என்ற ஒர் அணியை உருவாக்கி, போட்டியிட்டார். அதிலும் விஷால் அணியினரே பெருவெற்றி பெற்ற‍து.

அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருந்த கலைப்புலி S.தாணு அவர்களுடன் ஏற்பட்ட‍ கருத்துமோதல் மற்றும் தாணுவின் சீண்டுதலாலும் ஆவேசமாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் ஓர் அணி அமைத்து போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று தலைவராகவும் தேர்ந்தெ டுக்க‍ப்பட்டார். மேற்படி இருதேர்தல்களிலும் ஏற்கனவே இருந்த தலை மையினால். தான் தொடர்ச்சியாக சீண்டப்பட்டதால்தான் அந்த தேர்தல்களில் போட்டியிட்டார். அவற்றில் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு விஜய் நடித்த‍ மெர்ஸல் திரைப்படத்தில் இடம்பெற்ற‍ GST குறித்த‍ வசன சர்ச்சையால் தமிழக பா.ஜ•க. தலைவர் திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் கடுமையாக எதிர்த்தார்.  இதனை சற்றும் எதிர்பாராத விஷால்… பா.ஜ•கவுக்கு எதிராகவும்  மெர்சல் திரைப்பட த்திற்கு ஆதரவாகவும் தனது எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தார். இதன் ஒருபடி மேலே போய் திரு.H. ராஜா அவர்கள்.. தான் மெர்ஸல் திரைப்படத்தை இணைய தளத்தில் பார்த்ததாக பகிரங்கமாக தொலைக்காட்சியில் பேட்டி அளி த்தார். இதனால் மிகுந்த கொதிப்படைந்த நடிகர் விஷால்… ஒரு மத்திய பிரதிநிதி இப்படி பகிரங்கமாக மெர்ஸல் திரைப்படத்தை இணையதளத்தில் பார்ப்பதா? பார்த்ததை பகிரங்கமாக சொல்வதா? இது மிகவும் கண்டிக்க‍த்தக்க‍து என்றும் திரு H ராஜா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கடுமையாக எதிர்ப்புக் குரல் எழுப்பினார். இவர் எதிர்ப்பு குரல் எழுப்பிய ஓரிரு தினங்களில் தி.நகரில் இருக்கும் நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (Vishal Film Factor) நிறுவன அலுவலகத்திற்கு வருமான வரி த்துறை அதிரடியாக சோதனையிட்டது என்பது குறிப்பிடத்தக்க‍து.

தன்னை சீண்டியவரை தாண்டியே பழக்க‍ப்பட்டவரான விஷால் தற்போது தன்னை சீண்டிய அரசியல் தலைவர்களை ஒரு கை பார்க்க‍வே தற்போது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதாக செவி வழித் தகவல்கள் தெரிவிக்கின்றன•

தி.மு.க வேட்பாளராக திரு.மருதுகணேஷ், அதிமுக வேட்பாளராக திரு. மதுசூதனன், சுயேட்சை வேட்பாளராக‌ டி.டி.வி. தினகரன், பாஜக வேட்பாளராக திரு. கரு நாகராஜன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களை எதிர்த்து நடிகர் விஷால் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க‍வேண்டும்.

ஆனால் ஒன்று இந்த வயதில் . . .

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு வராத துணிச்சல்
உலகநாயகன் க‌மல்ஹாசனுக்கு வ‌ராத துணிச்சல்
இளைய தளபதி விஜய்க்கு வ‌ராத துணிச்சல்
சில நடிகர்களுக்கு வராத துணிச்சல்

நடிகர் விஷாலுக்கு வந்திருக்கிறதே!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு கிடைப்ப‍து வெற்றியோ தோல்வியோ, அது ஒருபுறம் இருக்க‍ட்டும்.

அவரது துணிச்சலான முடிவை பாராட்டுவோம்.

— விதை2விருட்சம் சத்தியமூர்த்தி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply