பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைப்படத்தில் 15 நிமிட காட்சியில் நயன்தாரா – விஜய் சேதுபதி
பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukottai Prabhakar) இணைத்திரைக்கதை & வசனத்தில், கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில
அஜய் ஞானமுத்துவின் கதை மற்றும் இயக்கத்தில் ஆக்ஷன் கலந்த த்ரில்லராக உருவாகி வரும் படம் `இமைக்கா நொடிகள்’. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் ராக்ஷி கண்ணா (Raashi Kanna) நடிக்கிறார்.
அதர்வாவின் அக்காவாக நயன்தாரா (Nayanthara acting Adharva’s Sister role) நடிக்கிறார். நயன்தாராவின் சாதுவான கணவராக விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். விஜய் சேதுபதி – நயன்தாரா (Vijay Sethupathi – Nayanthara) ஜோடி ஏற்கனவே ‘நானும் ரவுடி தான் (Naanum Rowdythan)’ படத்தின் மூலம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த ஜோடி ‘இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal)’ படத்தில் சுமார் 15 நிமிட காட்சியில் இணைந்து ரசிகர்க ளுக்கு விருந்தளிக்க விருக்கிறது. அதற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்று தொடங்கி யுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி றார்.
இவர்களுடன் ரமேஷ் திலக் (Ramesh Thilak), தேவன் (Devan), உதய் மகேஷ் (Udhai Magesh) முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கி ன்றனர். படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி (Hip Pop Thamizha Aadhi) இசையமைத்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.