Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரௌபதியின் காலில் விழுந்து, தாயே என்னை மன்னித்து விடு என்று கதறி அழுத அஸ்வத்தாமன்

திரௌபதியின் காலில் விழுந்து… “தாயே என்னை மன்னித்து விடு!” என்று கதறி அழுத அஸ்வத்தாமன்

பாரத போரின் போது ஒரு நாள் நள்ளிரவு வேளையில் திரௌபதியின் குழந்தைகள் உறங்கிக்

கொண்டிருந்த போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன் (Ashwathama S/o. Dhronachariar) கொன்று விட்டான். அவள் மிகுந்த துயரத்தில் இருந்தாள். மகன்க ளைக் கொன்ற அஸ்வத்தா மனை அர்ஜூனன் (Arujunan) இழுத்து வந்து திரௌபதி யின் முன் நிறுத்தினான்.

அவள் அஸ்வத்தாமனை சபிக்கவில்லை. மாறாக அவன் கால்களில் விழுந்து “அஸ்வத்தாமா நீ இப்படி செய்யலாமா? உன் தந்தையிடம் தானே என் கணவன்மார் மாணவர்களாக இருந்தனர். என் குழந்தைகள் உனக்கு என்ன துரோகம் செய்தனர்? ஆயுதமின்றி உறங்கிக்கொண்டிருந்தவர்களை கொல்லலாமா?” என்றாள்.

அப்போது அங்கு நின்ற பீமனுக்கு கோபம் வந்து விட்டது. நம் பிள்ளைகளைக் கொ ன்றவனின் காலில் விழுந்து கெஞ்சுகிறாளே இந்தப் பாவி பிள்ளைகளை இழந்த இவளது மன நிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்று சீறினான்.

அவனை சமாதானம் செய்த திரௌபதி (Drowpathi – Panjali) அர்ஜூனனிடம் “அன்பரே குருவின் மகனைக் கொல்வது பெரும்பாவம். பயம் கொண்டவன் உறங்கு கிறவன் போதையில் இருப்பவன் சரண் அடைந்தவன் பெண் ஆகியோரை கொல்வ து தர்மம் கிடையாது.” என்றாள்.

ஆனால் அர்ஜூனன் அஸ்வத்தாமனைக் கொன்றே தீருவது என்ற சபதத்தை நிறை வேற்றுவதில் உறுதியாக இருந்தான். உடனே அவள் “ நான் ஒரு தாய் என் பிள்ளை களை இழந்து தவிப்பதுபோல் இந்த அஸ்வத்தாமனின் தாயும் தவிக்கக்கூடாது. ஒரு வேளை இவனை கொல்வதனால் என் பிள்ளைகள் திரும்ப வந்து விடுவார்களா? “ எனக் கேட்டாள்.

பிறகு அஸ்வத்தாமனை மொட்டை அடித்து அனுப்பிவிடும்படி சொன்னாள். இதை க்கேட்ட‍ அஸ்வத்தாமனுக்கு அதுவரை சகோதரியாக பாவித்து வந்த‌ திரௌபதி… அந்த தருணத்தில் தாயாக கண்களுக்கு தெரிந்தாள்.. தான் செய்த தவறுக்காக மனம் வருந்தி…. திரௌபதியின் சகிப்புத் தன்மை – பெருந்தன்மையையும், பக்குவ த்தையும் கண்டு அதிசயித்து… அவளது காலில் விழுந்து வணங்கி… “தாயே! என்னை மன்னித்து விடு” என்று மன்றாடினான்.

இந்த பாரத காட்சியில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம்…. எல்லாம் கடவுளின் சித்தப்படி நடக்கிறது என்பதும் சகிப்புத் தன்மை எல்லாருக்கும் முக்கியம் என்பதும் தெரிய வருகிறது.

=> விஜிகுமாரி

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: