Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு – விஷால் கைது ஆவாரா? – போலி கையெழுத்து குற்ற‍ச்சாட்டின் கீழ்…

நடிகர் விஷால் மனு நிராகரிப்பு – விஷால் கைது ஆவாரா? – போலி கையெழுத்து குற்ற‍ச்சாட்டின் கீழ்…

வருகிற 21-ந்தேதி அன்று நடைபெற உள்ள ஆர்.கே. நகர் (R.K. Nagar) தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான‌ 

வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கி நேற்றைய தினம் 04.12.2017 அன்றுடன் நிறைவடைந்தது.

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் (DMK Candidate Marudhu Ganesh), அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் (ADMK Candidate Madhusudhanan), சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் (Independent Candidate T.TV. Dhinakaran), பா.ஜ.க வேட்பாளர் கரு நாகராராஜன் (BJP Candidate Karu Nagarajan), சுயேட்சை வேட்பாளராக  நடிகர் விஷால் (Independent Candidate Actor Vishal) மற்றும் சுயேட்சை வேட்பாளர் J. தீபா (Independent Candidate J. Deepa) ஆகியோர் உட்பட மொத்த‌ம் 131பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொட ங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்பு மனு ஏற்க அ.தி.முகவும் தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து அவர து மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. இறுதியில் வேட்பு மனு விண்ண‍ப்ப‍த்த்தை தாக்கல் செய்யும்போது விஷாலை முன்மொழிந்தவர்க ளில் இருவரது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ள‍தாக குற்ற‍ம் சாட்ட‍ப்பட்டு அவரது மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். இதனை அதிகாரப் பூர்வமாகவும் அறிவித்தார். மேலும் போலி கையெழுத்து விவ காரத்தில் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க‍வும் வாய்ப்பு இருக்கி றது. அப்ப‍டியெடுக்கும் பட்சத்தில் அவர் கைது செய்ய‍ப்படவும் வாய்ப்புக்க ள்  இருப்ப‍தாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ஜெ. தீபாவின் வேட்புமனுவும் நிராகரிக்க‍ப்படது. இதற்கு காரணமாக ஜெ. தீபா… தனது வேட்பு மனுவில் படிவம் 26-ஐ பூர்த்தி செய்யாததாலும் சொத்துவிவரம் உள்ளிட்ட‍ சில முக்கிய விவரங்ளை ஜெ. தீபா தனது வேட்பு மனுவில் குறிப்பிடாததாலும், தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெ. தீபா வின் வேட்பு மனுவை நிராகரிக்க‍ப்ப‍ட்ட‍து குறிப்பிடத்தக்க‍து.

இதனை அறிந்த நடிகர் விஷால்…  தனது ஆதரவாளர்களுடன் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்படி விஷால் குறித்த‌ செய்திக்கு பிறகு வந்த விஷால் குறித்த‍ புதிய செய்தியினை படிக்க‌ இந்த வரியினை கிளிக் செய்யவும்

 

நள்ளிரவில் விஷால் மனு மீண்டும் நிராகரிப்பு – திடீர் திருப்ப‍ம் – விஷால் அதிருப்தி (Click this link)

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply