கூகுளில் தேடுவோருக்கு… கூகுள் வழங்கும் ஓர் இன்ப அதிர்ச்சி
இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை பதிப்பித்து வரும் கூகுள் தற்போது தன்
கூகுள் தேடல்களை மேலும் சுவாரஸ்யமாக்கும் நோக்கில் புதிய அம்சத்தை கூகுள் (Google) தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமு கம் செய்துள்ளது. கூகுளில் பிரபலங்களை தேடினால் வழக்கமான டெக்ஸ்ட் பதில்களை வழங்காமல், செல்ஃபி வீடியோ (Selfie Video) வடிவில் பதில் வழங்கும் புதிய வசதியை கூகுள் அறிமுகம் (Google Introduce) செய்துள்ளது.
அந்த வகையில் இனி கூகுளில் பிரபலங்களிடம் கேள்விகளை எழுப்பும் போது செல்ஃபி வீடியோ மூலம் கூகுள் உங்களுக்கு பதில் வழங்கும். எடுத்துக்காட்டாக, நடிகர் ரஜினியிடம் ஏதேனும் கேள்வி கேட்கும் பட்ச த்தில், உங்களது கேள்விகளுக்கு செல்ஃபி (Selfie) வீடியோ வடிவில் பதில்
அளி க்கப்படும்.
தற்சமயம் இந்த அம்சம் அமெரிக்காவில் மட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய அம்சத்தின்மூலம் மொபைல்போனின் தேட ல்களுக்கு நேரடியாக சம்பந்தப்பட்டவரிடம் இருந்தே பதில் பெற முடியும். என கூகுள் வலைத்தளத்தில் பதிவி டப்பட்டுள்ளது.