சூப்பரான சூப் துளசி வெண்ணெய் சூப் (Super Tulsi Butter Soup) குடித்து வந்தால்
நறுமணம் மிக்க இந்த துளசி… வைணவக்கோயில் உள்ள பெருமாளுக்கு
துளசியை மாலையாக அணிவிப்பார்கள். அங்கு துளசி கலந்த நீரை யும் தீர்த்தமாக கொடுப்பார்கள். அந்த துளசி நீர் என்பது மிகுந்த ஆரோ க்கியம் அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த துளசியில் சூப்பரான சூப் செய்து குடித்தால் என்னமாதிரியான நற்பலன் கிட்டும் என்பதை இங்கு காண்போம்.
குக்கரில் வெண்ணெய் சிறிதுபோட்டு எரியும் அடுப்பில் வைக்க வே ண்டும். அது மிளகுத்தூள், சுக்குப்பொடி, நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், சோம்பு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்க வேண்டும். அதன்பிறகு தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து
2 விசில் வரும்வரை மூடி வைக்க வேண்டும். அதன்பிறகு வடிகட்டி, அதில் புதினா இலையையும், துளசி இலையையும் சேர்த்து குடித்தால் குளிரு க்கும் இதமாக இருக்கும் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியாகவும் இரு க்கும் என்கிறார்கள் இயற்கை வல்லுநர்கள்.
மருத்துவரின் ஆலோசனையுடன் குடிக்கவும்
=> மலர்