Wednesday, August 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சங்கர் ஆணவக்கொலை – கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு – நீதிமன்றம் அதிரடி

சங்கர் ஆணவக் கொலை – கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு – திருப்பூர் நீதிமன்றம் அதிரடி

பழநி(Palani)யை சேர்ந்த கவுசல்யா (Kowsalya) என்பவரை திருப்பூர் மாவட்டம் உடுமலை  (Near Tirupur District Udumalai) அருகேயுள்ள

குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (Shankar) காதலித்து ஜாதி மறுப்பு கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் கடந்த 13-03-2016 ல் உடுமலையில், கவுசல்யாவின் உறவினர்கள்.. பட்ட‍ப்பகலில் சங்கரை மடக்கி சராமரியாக வெட்டி கொ ன்றனர். கௌசல்யா படுகாயமடைந்து சிகிச்சை பெற்றார். சம்பவம் தொடர்பாக கொலை, வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்த னர். கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டி த்துரை, மணி கண்டன், மைக்கேல், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, மணிகண்டன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.

தீர்ப்பு

வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோ ர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், கவுசல்யாவின் தந்தை சின்ன ச்சாமி உள்ளிட்ட 8 பேரும் குற்றவாளிகள் எனவும், கௌச ல்ய வின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த மணி கண்டன் (Manikandan), ஜெகதீசன் (Jagadeesan), செல்வ குமார் (Selvakumar), கலை தமிழ்வாணன் (Kalai Thamil vanan), மதன் (Madhan) என்கிற மைக்கேல் (Micheal)  ஆகியோருக்கு தூக்கு தண்ட னை (Hang Punishment) அறிவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மீதமுள்ள இரண்டு குற்ற வாளிகளில், ஸ்டீபன் தன்ராஜூ (Stephen Dhanraj)க்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ள்ளது.

தாயார் அன்னலட்சுமி (Anna Lakshmi), தாய்மாமன் பாண்டித்து ரை (Pandithurai) மற்றும் பிரசன்னா ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார். அவர்களுக்கான தண்டனை குறித்த வாதம் நடந்தது. தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என குற்றவாளிகள் தர ப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனா ல், தண்டனையை குறைத்து வழங்க முடியாது என நீதிபதி அறிவித்துள்ளார்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply