Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேசிய கவி பாரதி – ம‌னம் வெளுக்க வழி சொன்ன மகான்!

தேசிய கவி பாரதி – ம‌னம் வெளுக்க வழி சொன்ன மகான்!

இந்த (டிசம்பர், 2017) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம்

தேசத்தைத் தெருவில் நிறுத்திக் கொண்டிருக்கும் மரத்த‍ சிந்தனையுள்ள‍ கும்பலிலி ருந்து விலகி…

தனியொருவனாய் எழுந்து… தேசத்தைத் தெய்வமாக்கி தேரிலேற்றி தன் பாடல்க ளால் தோள் கொடுத்து… பவனி வரச் செய்த பாரதி ஓர் உரத்த‍ சிந்தனையாளன் என்பதில் எவருக்கும் ஐயமில்லை.

கற்பனைகளைக் காசாக்கும் கவிஞர்கள் வாழும் இதே காலத்தில் நிஜங்களை நேர் பட பேசி எல்லாரின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்து சங்கடங்களைச் சந்தித்தவன் பாரதி!

இயற்கையை நேசித்ததோடு பூசித்த இன்பக் கவிஞன்! ம‌னம் வெளுக்க வழி சொன்ன மகான்! எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என வேண்டிய பொதுவு டமைப் புருஷன்! குழந்தைகளுக்கு இளைஞர்களுக்கும் பெண்களுக்கும், ஐந்தறிவு உயிர்களுக்கும் அறிவாளிக்கும் அறிவிலிக்கும், தெய்வத்திற்கும்.. தெய்வீகத்தை மூட நம்பிக்கையாக்கி… முடங்கிப் போனவர்ளுக்கும் கவிதைகள் படைத்த கற்பகத் தெரு பாரதியொருவனே.

சாதி மறுத்த‍… சம்பிரதாயங்களை வெறுத்த‍.. சடங்களுகள் தவிர்த்த‍… மதங்களை மதித்த உண்மையான இந்தப் பகுத்தறிவு பகலவனுக்கு… பகுத்தறிவு கட்சிகளும்.. பகுத்தறிவு பக்தர்களும் உரிய மரியாதையை ஏற்படுத்தி… உயரிய அங்கீகாரத்தைத் தந்திருக்க‍ வேண்டாமா?

பாரதி விழாவென்று மாலை அணிவிப்ப‍துடனும் பாரதி பெயரில் விருது வழங்குவ துடனும் அரசின் பணி முடிவடையலாமா? பாரதியின் படைப்புக்களை பாரதியின் எண்ண‍ங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க‍ தமிழ் பேசும் அரசு முழு முனைப்புடன் முயன்றாலல்வா தமிழ்வாழும் தமிழனும் வாழ்வான்.

பாரதிக்கு தேசிய கவி அந்தஸ்து தர வேண்டும் என்று ஒற்றை மனிதராக போராடும் எதிரொலி விஸ்வநாதனின் கோரிக்கையும் இசைப் பிரம்மம் தியாகராஜ ஸ்வாமி க்கு திருவையாறில் நடக்கும் இசைச் சங்கமம் போன்று.. எட்டைய புரத்தில் ஆண்டு தோறும் பாரதிக்குப்பாட்ட‍ரங்கம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிற தினமணி வைத்தியநாதனின் கோரிக்கையையும் உரத்த‍ சிந்தனையுள்ள‍ ஒவ்வொருவரும் பாராட்டுவதோடு அதை செயல்படுத்திட ஓரணி பால் திரள வேண்டாமா?

தமிழகத்தின்மீது மத்திய அரசு கடைக்கண் பார்வை வைத்திருக்கும் கனிந்த நேரத்தில்… பாரதியை சுவாசிக்கும் அய்யா இல• கணேசன் அவர்கள், மாநிலங்கள வை உறுப்பினராக இருக்கும் இந்த மகத்தான சூழலில்… தமிழை நேசிக்கும் மரியாதைக்குரிய மாஃபா பாண்டியராஜன் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் தக்க தருணத்தில் எல்லா தமிழ் அமைப்புகளும் எல்லா தமிழறிஞர்களும் எல்லா தமிழார்வலர்களும் தமிழ் ஊடகங்களும், பத்திரிகை ஒருமித்து ஓங்கி குரலெழுப்பினால் ஊர் போற்றும் பாரதியை பார் போற்றும் பாரதி யாக்கிவிட முடியும்.

தேசந்தனை தெய்வம்மெனக் கும்பிடச் சொன்ன பாரதியை தேசிய கவிஞனாக்கி தொழுவதற்குத் தோள்தட்டிப் புறப்படுவோம்! நெஞ்சம் நிமிர்த்திக் குரல் கொடுப்போம்.

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|
இந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்

திரு.உதயம் ராம் : 94440 11105

/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\////\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\\//\\///\\//\\|

நம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர  இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்
ஆண்டு சந்தா – ரூ.150/-
2 ஆண்டு சந்தா – ரூ.300/-
5 ஆண்டு சந்தா – ரூ.750/-
வாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-
புரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-
வங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…
இந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.
வெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்
பெயர் – நம் உரத்த‍ சிந்தனை
வங்கி – இந்தியன் வங்கி
வங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5
க‌ணக்கு எண்.401056844 (SB)
IFSC Code: IDIB000T055
சந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.
/\\/\/\/\\/\/\/\\/\/\/\\/\/\\/\\/\\/\/\////\///\///\///\/\//\///\///\///\///\///\///\///\///\///\///\///\//\/\//\/\//\/\/\//\//\/\///\//\/\/\//\///\///\\/\//\///\///

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: